Gun shooting in Pakistan | பாகிஸ்தானின் தென்மேற்கில் துப்பாக்கி ஏந்தியவர்கள் 20 சுரங்கத் தொழிலாளர்களை சுட்டுக்கொன்றனர். இந்தத் தாக்குதலில் 7 பேர் காயமுற்றனர் என போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பாகிஸ்தானின் பலுசிஸ்தான் மாகாணத்தில் சமீபத்திய தாக்குதல் தலைநகரில் ஒரு பெரிய பாதுகாப்பு உச்சிமாநாடு நடத்தப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு நடந்துள்ளது.
துப்பாக்கி ஏந்திய நபர்கள் வியாழக்கிழமை இரவு டுகி மாவட்டத்தில் உள்ள ஒரு நிலக்கரி சுரங்கத்தில் உள்ள விடுதிக்குள் நுழைந்து, கண்மூடித்தனமாக ஈவு இரக்கமின்றி சுட்டுக்கொன்றுள்ளனர்.
பலுசிஸ்தானின் பஷ்டூன் மொழி பேசும் மக்களை குறி வைத்து இந்தத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இறந்தவர்களில் மூன்று பேர் ஆப்கானிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர்கள் ஆவார்கள்.
இந்தத் தாக்குதலுக்கு எந்தக் குழுவும் உடனடியாகப் பொறுப்பேற்கவில்லை, ஆனால் பொதுமக்கள் மற்றும் பாதுகாப்புப் படையினரைக் குறிவைக்கும் சட்டவிரோத பலூச் விடுதலை இராணுவத்தின் மீது போலீசார் சந்தேகம் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க
Baloch Protest: காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கான சர்வதேச தினத்தை முன்னிட்டு, நெதர்லாந்தின் உட்ரெக்ட் நகரில் பலூச் தேசிய இயக்கம் போராட்டம் நடத்தியது. பலூசிஸ்தானில் ஆயிரக்கணக்கானோர் கட்டாயமாக காணாமல் ஆக்கப்பட்டதாகவும்,…
India Rejects Ruling: சிந்து நதி நீர் ஒப்பந்தத்தை அமலில் வைத்திருக்க வேண்டும் என ஹேக்கில் உள்ள மத்தியஸ்த நீதிமன்றம் பிறப்பித்த தீர்ப்பை இந்தியா திட்டவட்டமாக நிராகரித்துள்ளது….
Jammu and Kashmir: ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முக்கியமான பகுதி என அமெரிக்க தூதர் தெரிவித்துள்ளார். ஜம்மு காஷ்மீர் மீதான நிலைப்பாட்டை மாற்றியதா அமெரிக்கா?…
India-Pakistan Hockey: ஹாக்கியில் இந்தியா-பாகிஸ்தான் இடையிலான போட்டி ஏன் ஒரு சமமான போட்டியாக இல்லை? கடந்த பத்தாண்டுகளுக்கும் மேலாக பாகிஸ்தானிடம் இந்தியா தோல்வியடையவில்லை….
Indus Waters Treaty : பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சிந்து நதி நீர் ஒப்பந்தம் தொடர்பாக இந்தியாவுக்கு புதிய எச்சரிக்கை விடுத்துள்ளார்….
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்