Haryana Elections Results 2024 | பாரதிய ஜனதா வேட்பாளர் கமல் குப்தா, காங்கிரஸ் வேட்பாளர் ராம் நிவாஸ் ராரா ஆகியோரை தோற்கடித்து மகத்தான வெற்றியை பதிவு செய்துள்ளார் நாட்டின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால்.
சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட இவர், 18,941 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிப் பெற்றுள்ளார். நாட்டின் புகழ்பெற்ற ஜிண்டால் குடும்பத்தை சேர்ந்த இவர் ஹிசார் தொகுதியில் போட்டியிட்டு வெற்றியை பதிவு செய்துள்ளார்.
சாவித்ரி ஜிண்டால் 2005 இல் தனது கணவர் OP ஜிண்டால் இறந்ததைத் தொடர்ந்து வணிகம் மற்றும் அரசியல் உலகில் அடியெடுத்து வைத்தார். ஜிண்டால் குழுமத்தின் தலைவராக, அவர் எஃகு, மின்சாரம், சுரங்கம் மற்றும் உள்கட்டமைப்பு ஆகியவற்றில் ஈடுபட்டுள்ள ஒரு கூட்டு நிறுவனத்தை நடத்திவருகிறார்.
இந்தியாவின் மூன்றாவது மிக உயர்ந்த சிவிலியன் விருதான பத்ம பூஷன் உட்பட பல விருதுகளை வென்றுள்ளார். சாவித்ரி ஜிண்டால் 2005 இல் ஹரியானா சட்டமன்றத்தில் முதன்முறையாக காங்கிரஸ் உறுப்பினராக இருந்தார்.
2009 இல் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார். 2013 இல் ஹரியானா அரசாங்கத்தில் அமைச்சராகப் பணியாற்றிய அவர், பின்னர் காங்கிரஸில் இருந்து விலகினார். ஃபோர்ப்ஸின் கூற்றுப்படி, சாவித்ரி ஜிண்டாலின் தனிப்பட்ட சொத்து மதிப்பு ₹ 3.65 லட்சம் கோடி என்று மதிப்பிடப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க : ‘தீர்ப்பை ஏற்றுக்கொள்ள முடியவில்லை’: சநதேகம் கிளப்பும் காங்கிரஸ்!
Horoscope Today: மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளின் இன்றைய (அக்.18, 2025) தின பலன் கணிப்புகள் இங்குள்ளன. உங்கள் ராசிக்கு இன்று எப்படி?…
Rajinikanth next Film: 1997 ஆம் ஆண்டு வெளியான அருணாச்சலம் திரைப்படத்திற்கு பின்னர் மீண்டும் ரஜினிகாந்துடன் சுந்தர் சி இணைகிறார்….
Karakattakaran actress kanaga: தமிழ் சினிமாவின் ஒரு காலகட்டத்தில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் நடிகை கனகா. இவர், ரஜினிகாந்த், மறைந்த விஜயகாந்த், சரத்குமார்,…
Dhanteras 2025: புதிய முதலீடு தொடங்க உகந்த நாளாக தந்தாரேஸ் பார்க்கப்படுகிறது. இந்த நாளில் நல்ல நேரம், தேதி உள்ளிட்ட விவரங்கள் இங்குள்ளன….
Dr Ramadoss: “தகுதி தேர்வால் பாதிக்கப்படும் ஆசிரியர்களுக்காக சிறப்பு சட்டத்தை இந்த சட்டசபை கூட்டத் தொடரிலேயே நிறைவேற்ற வேண்டும்” என வலியுறுத்தியுள்ளார் பா.ம.க நிறுவனர்- தலைவர்…
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
வாட்ஸ்அப்
ட்விட்டர்
இன்ஸ்டாகிராம்