தமிழகத்தில் நவ.18ஆம் தேதி புயலுக்கு வாய்ப்பு.. மழைக்கு வாய்ப்பு உண்டா?

Heavy Rain Alert: வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாக உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் காரணமாகத் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

Published on: November 15, 2026 at 1:27 pm

சென்னை, நவ.15, 2026: வங்கக்கடலில் அடுத்தடுத்து உருவாக உள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதிகள் காரணமாகத் தமிழகத்தில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. இதையடுத்து, சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

வங்கக்கடலின் தென்கிழக்குப் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி, நவம்பர் 16-ம் தேதிக்குள் புயலாக வலுப்பெற வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது வடமேற்கு மற்றும் வடக்கு-வடமேற்கு திசையில் நகர்ந்து மத்திய வங்கக்கடல் பகுதியில் புயலாக உருவாகக்கூடும்.

இந்த வானிலை அமைப்பு காரணமாக அந்தமான் கடல் மற்றும் வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 60 கி.மீ. வேகத்தில் காற்று வீசக்கூடும். நவம்பர் 17 முதல் காற்றின் வேகம் மணிக்கு 80 கி.மீ. வரை அதிகரிக்க வாய்ப்புள்ளது. நவம்பர் 18-ம் தேதி தீவிரப் புயலாக வலுப்பெறவும் வாய்ப்புள்ளதாகக் கணிக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, தமிழகத்தின் கிழக்குக் கடலோரப் பகுதிகளைச் சேர்ந்த மீனவர்கள் நவம்பர் 13-ம் தேதிக்குள் கரை திரும்ப அறிவுறுத்தப்பட்டனர். மேலும், மறு அறிவிப்பு வரும் வரை மீன்பிடி அனுமதிச் சீட்டுகள் வழங்குவது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்தப் புயல் ஆந்திரா – ஒடிசா கடற்கரை நோக்கி நகர வாய்ப்புள்ளதாகக் கூறப்பட்டாலும், கரையைக் கடக்கும் இடம் இன்னும் உறுதியாகவில்லை. சென்னையில் நவம்பர் 16, 17 ஆகிய தேதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க : தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா.. கடலோரப் பகுதிகளில் உஷார் நிலை.. பரபரப்ப தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com