பெண் காவலருக்கு வேனில் பாலியல் தொல்லை; சிறப்பு எஸ்.ஐ. கைது!

Woman Constable Harassment Case: திருநெல்வேலியில் பெண் காவலருக்கு வேனில் பாலியல் தொல்லை அளித்த புகாரில், சிறப்பு எஸ்.ஐ. கைது செய்யப்பட்டுள்ளார்.

Published on: November 6, 2026 at 11:40 am

திருநெல்வேலி, நவ.6, 2026: திருநெல்வேலியில் பெண் காவலருக்கு பாலியல் தொல்லை அளித்ததாகக் கூறப்படும் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் குமாரை மாநகரக் காவல்துறையினர் கைது செய்துள்ளனர். மேலப்பாளையம் காவல் நிலையத்தில் பணியாற்றும் 49 வயதான குமார், தாழையூத்து பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

இந்நிலையில், கடந்த நவம்பர் 3ஆம் தேதி, ஈரோடு மாவட்டம் பெருந்துறையில் முதலமைச்சர் ஜோசப் விஜய் பங்கேற்ற அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சிக்குப் பாதுகாப்புப் பணிக்காக திருநெல்வேலியில் இருந்து காவலர்கள் குழுவாகச் சென்றுள்ளனர். நிகழ்ச்சி முடிந்து இரவு வேனில் திரும்பிக் கொண்டிருந்தபோது, முன் இருக்கையில் அமர்ந்திருந்த பெண் காவலருக்குக் குமார் பாலியல் தொல்லை அளித்ததாகப் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

திருநெல்வேலி திரும்பியதும் பாதிக்கப்பட்ட பெண் காவலர், மாநகரக் காவல் ஆணையர் தேஷ்முக் சேகர் சஞ்சயிடம் புகார் அளித்துள்ளார். அவரது அறிவுறுத்தலின்படி, பாளையங்கோட்டை அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து, குமார் மீது ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து காவல்துறையினர் கைது செய்தனர்.

மேலும், சில மாதங்களுக்கு முன்பு கார்த்திகை தீபத் திருவிழா பாதுகாப்புப் பணியின்போதும் மற்றொரு பெண் காவலரிடம் அவர் இதேபோல் நடந்துகொண்டதாகப் புகார் எழுந்துள்ளதாகக் காவல்துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. இச்சம்பவம் திருநெல்வேலி காவல்துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதையும் படிங்க : ஆசை காட்டி குதிரைப் பேரம்.. த.வெ.க மீது நயினார் விமர்சனம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com