முரசு புயல் எதிரொலி; சென்னை விமான நிலையத்தில் 11 விமானங்கள் ரத்து!

Flight Update: முரசு புயல் காரணமாக நிலவும் மோசமான வானிலையால் சென்னை விமான நிலையத்தில் இன்று 11 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

Published on: November 2, 2026 at 1:42 pm

Updated on: November 2, 2026 at 1:53 pm

சென்னை, நவ. 2 2026: வங்கக்கடலில் உருவாகியுள்ள முரசு புயல் தீவிரப் புயலாக வலுப்பெற்று ஆந்திரப் பிரதேச கடற்கரையை நோக்கி நகர்ந்து வருகிறது. இதன் காரணமாக சென்னை உள்ளிட்ட வட தமிழகப் பகுதிகளில் கனமழை பெய்து வரும் நிலையில், மோசமான வானிலை காரணமாக சென்னை விமான நிலையத்தில் இன்று (நவம்பர் 2) 11 உள்நாட்டு விமானச் சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனை இந்திய விமான நிலையங்கள் ஆணையம் (AAI) அறிவித்துள்ளது.

ரத்து செய்யப்பட்ட விமானங்களில் விஜயவாடா – சென்னை இடையிலான இரண்டு விமானங்களும், சென்னை – விஜயவாடா இடையிலான ஒரு விமானமும் அடங்கும். அதேபோல், சென்னை – ராஜமுந்திரி, ராஜமுந்திரி – சென்னை, கடப்பா – சென்னை, சென்னை – கடப்பா ஆகிய வழித்தடங்களில் தலா ஒரு விமானச் சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது.

மேலும், சென்னை – திருச்சி இடையே இரண்டு விமானங்களும், திருச்சி – சென்னை இடையே இரண்டு விமானங்களும் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதன்படி, விஜயவாடா, ராஜமுந்திரி, கடப்பா, திருச்சி ஆகிய நான்கு நகரங்களுக்கான விமானப் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. ரத்து செய்யப்பட்ட விமானங்களின் பயண நேரங்கள் மற்றும் விமான எண்கள் குறித்த விவரங்களையும் சென்னை விமான நிலையம் வெளியிட்டுள்ளது.

இதுதொடர்பாக சென்னை விமான நிலையத்தின் அதிகாரப்பூர்வ எக்ஸ் தளப் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், பாதிக்கப்பட்ட பயணிகள் கூடுதல் தகவல்கள் மற்றும் உதவிகளுக்கு சம்பந்தப்பட்ட விமான நிறுவனங்களைத் தொடர்புகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். எனவே, விமானப் பயணிகள் விமான நிலையத்திற்குப் புறப்படும் முன்பு தங்களது விமானச் சேவை நிலவரத்தைச் சரிபார்த்துக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: தீவிரப் புயலாக வலுப்பெற்ற முரசு.. கொட்டப்போகும் மழை.. எந்தெந்த இடங்கள் தெரியுமா?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com