ராமாயணம் முன்பதிவிலேயே ரூ.17 கோடி வசூல்.. 3.33 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனை!

Ramayana: நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படம் வெளியாகும் முன்பே வசூலில் கவனம் ஈர்த்துள்ளது.

Published on: October 31, 2026 at 1:27 pm

மும்பை, அக்.31, 2026: நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் பிரம்மாண்டமாக உருவாகியுள்ள ‘ராமாயணம்’ திரைப்படம் வெளியாகும் முன்பே வசூலில் கவனம் ஈர்த்துள்ளது. நிதேஷ் திவாரி இயக்கியுள்ள இப்படம் நவம்பர் 5ஆம் தேதி தீபாவளியை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ளது. இந்நிலையில், படத்திற்கான முன்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்திய அளவில் இதுவரை 3.33 லட்சம் டிக்கெட்டுகள் விற்பனையாகியுள்ளன. இதன் மூலம் முன்பதிவு வசூல் ரூ.17.08 கோடியை எட்டியுள்ளது. மொத்தம் 6,780 காட்சிகளுக்கான டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாகத் திரைத்துறை வர்த்தகக் கண்காணிப்பு நிறுவனமான Sacnilk தெரிவித்துள்ளது.

மொழிவாரியான வசூலில் இந்திப் பதிப்பு மட்டும் ரூ.14.17 கோடி வசூலித்து முதலிடத்தில் உள்ளது. கன்னடப் பதிப்பு ரூ.2.36 கோடியும், தெலுங்குப் பதிப்பு சுமார் ரூ.49.69 லட்சமும் வசூலித்துள்ளன. தமிழ்ப் பதிப்பு ரூ.5.49 லட்சம் வசூலித்துள்ளது. நகரங்கள் வாரியாக டெல்லி முதலிடத்திலும், பெங்களூரு அடுத்த இடத்திலும் உள்ளன.

இப்படத்தில் ரன்பீர் கபூர் ராமராகவும், சாய் பல்லவி சீதையாகவும், யாஷ் ராவணனாகவும் நடித்துள்ளனர். மேலும், சன்னி தியோல் அனுமனாகவும், ரவி துபே லட்சுமணனாகவும் நடித்துள்ளனர். இரண்டு பாகங்களாக உருவாகும் இப்படத்தின் முதல் பாகம் நவம்பர் 5ஆம் தேதி வெளியாக உள்ள நிலையில், முன்பதிவு வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : கீர்த்தி சுரேஷ் – ராதிகா ஆப்தே நடிப்பில் ‘அக்கா’ வெப் தொடர்.. எப்படி இருக்கிறது?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com