PM Modi Chennai Visit : சென்னையில் ஒரே நேரத்தில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் ரோடு ஷோ நடத்தினார்கள்.
PM Modi Chennai Visit : சென்னையில் ஒரே நேரத்தில் பிரதமர் மோடி, முதல்வர் விஜய் ரோடு ஷோ நடத்தினார்கள்.

Published on: October 11, 2026 at 2:38 pm
Updated on: October 11, 2026 at 5:02 pm
சென்னை, அக்.11, 2026: சென்னையில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தமிழக முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் ஆகியோர் ஜிஎஸ்டி சாலையில் ஒரே நேரத்தில் ரோடு ஷோ நடத்தினர்.
பல்வேறு வளர்ச்சித் திட்டங்களைத் தொடங்கி வைப்பதற்காக ஐந்து மணி நேரப் பயணமாக சென்னை வந்த பிரதமர் மோடி, டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் வந்து, காலை 11 மணிக்கு சென்னை பழைய விமான நிலையத்தைச் சென்றடைந்தார். அவரைத் தமிழக ஆளுநர் ராஜேந்திர அர்லேகர், முதலமைச்சர் விஜய், தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன், அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி கே. பழனிசாமி, மாநில அமைச்சர்கள் மற்றும் அரசு உயர் அதிகாரிகள் வரவேற்றனர்.
விமான நிலையத்தில் வரவேற்பைப் பெற்ற பிறகு, காலை 11.15 மணியளவில் ஆறாவது நுழைவாயில் வழியாகப் பிரதமர் மோடி வெளியேறினார். அவரது கார் ஜிஎஸ்டி சாலையில் மெதுவாகச் சென்றபோது, வாகனத்தின் கதவைத் திறந்து நின்றபடி சாலையின் இருபுறங்களிலும் திரண்டிருந்த மக்களைப் பார்த்துக் கையசைத்து வரவேற்றார்.
அவரைத் தொடர்ந்து மற்றொரு காரில் சென்ற முதலமைச்சர் விஜய்யும், காரின் ஜன்னலைத் திறந்தபடி உற்சாகமாகப் பொதுமக்களைப் பார்த்துக் கையசைத்தார். பிரதமர் மோடியை வரவேற்பதற்காக ஜிஎஸ்டி சாலையில் பாஜக தொண்டர்கள், பெண்கள் உள்ளிட்ட ஏராளமானோர் வரவேற்புப் பதாகைகளுடன் திரண்டிருந்தனர். இரு தலைவர்களும் ஒரே வழித்தடத்தில் அடுத்தடுத்து ரோடு ஷோ நடத்தியது அப்பகுதியில் கவனத்தை ஈர்த்தது.
இரு தலைவர்களின் பயணத்தையொட்டி, சென்னை பல்லாவரம் முதல் கிண்டி வரையிலான ஜிஎஸ்டி சாலையில் சிறிது நேரம் போக்குவரத்து நிறுத்தப்பட்டது. பிரதமர் மோடியின் சென்னை வருகையின்போது, பூந்தமல்லி – வடபழனி இடையிலான 14.64 கிலோமீட்டர் நீளமுள்ள சென்னை மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட வழித்தடத்தைத் தொடங்கி வைப்பது உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகள் திட்டமிடப்பட்டுள்ளன. பிரதமர் மோடியும் முதலமைச்சர் விஜய்யும் ஒரே நாளில் அடுத்தடுத்து பொதுமக்களைச் சந்திக்கும் வகையில் நடைபெற்ற இந்த நிகழ்வுகள் அரசியல் வட்டாரத்திலும் கவனத்தைப் பெற்றுள்ளன.
இதையும் படிங்க : நெற்றியில் திருநீறு, கழுத்தில் மாலை, காவி உடையில் திருவள்ளூர் சிலை.. சென்னையில் பரபரப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com