பாகிஸ்தானில் பரபரப்பு.. பிரமாண்ட பேரணியை தொடங்கிய இம்ரான் கான் ஆதரவாளர்கள்!

Imran Khan: இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி நீண்ட பேரணியைத் தொடங்கியுள்ளனர்.

Published on: October 6, 2026 at 2:53 pm

இஸ்லாமாபாத், அக்.6, 2026: பாகிஸ்தானில் சிறையில் உள்ள முன்னாள் பிரதமர் இம்ரான் கானின் பாகிஸ்தான் தெஹ்ரீக்-இ-இன்சாஃப் (PTI) கட்சி மற்றும் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப் தலைமையிலான அரசுக்கு இடையேயான பேச்சுவார்த்தை எந்த உடன்பாடும் இல்லாமல் முடிவடைந்ததைத் தொடர்ந்து, இம்ரான் கான் ஆதரவாளர்கள் இஸ்லாமாபாத்தை நோக்கி நீண்ட பேரணியைத் தொடங்கியுள்ளனர்.

இம்ரான் கானை உடனடியாக சந்திக்க அனுமதிப்பது, அவரது தனிப்பட்ட மருத்துவர்கள் பரிசோதனை மற்றும் சிகிச்சை அளிக்கும் வகையில் மருத்துவமனைக்கு மாற்றுவது உள்ளிட்ட கோரிக்கைகளை PTI முன்வைத்தது. ஆனால், போராட்டத்தை முதலில் கைவிட வேண்டும் என அரசு வலியுறுத்தியதால் பேச்சுவார்த்தையில் முட்டுக்கட்டை ஏற்பட்டது.

வெள்ளிக்கிழமை நடைபெற்ற முதல் கட்ட பேச்சுவார்த்தைக்குப் பிறகு, சனிக்கிழமை இரவு இரண்டாவது கட்ட பேச்சுவார்த்தையும் நீண்ட நேரம் நடைபெற்றது. எனினும், இம்ரான் கானை சந்திப்பது மற்றும் கைதிகளுக்கான மருத்துவ அணுகல் உள்ளிட்ட விவகாரங்களில் இருதரப்புக்கும் உடன்பாடு ஏற்படவில்லை. மேலும், பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளில் மத்திய அரசுடன் கைபர் பக்துன்க்வா மாகாண அரசு ஒத்துழைப்பது தொடர்பான விவகாரமும் பேச்சுவார்த்தை தோல்வியடைய முக்கிய காரணமாக இருந்ததாக அரசு தரப்பு தெரிவித்துள்ளது.

இதையடுத்து, கைபர் பக்துன்க்வா முதலமைச்சர் சோஹைல் அஃப்ரிடி தலைமையில் ஆதரவாளர்கள் பேரணியை முன்னெடுத்துள்ளனர். அக்டோபர் 4ஆம் தேதி லக்கி மார்வத் பகுதியில் இருந்து தொடங்கிய பேரணி, கரக், கோஹாட், பெஷாவர் உள்ளிட்ட பகுதிகள் வழியாக இஸ்லாமாபாத்தை நோக்கி செல்லும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. ஆயிரக்கணக்கான இம்ரான் கான் ஆதரவாளர்கள் பேரணியில் பங்கேற்றுள்ள நிலையில், இறுதியாக இஸ்லாமாபாத்தில் பெருமளவிலான ஆதரவாளர்களைத் திரட்ட இம்ரான் கான் கட்சி திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, போராட்டக்காரர்கள் இஸ்லாமாபாத்துக்குள் நுழைவதைத் தடுக்கும் வகையில் பாகிஸ்தான் அரசு பாதுகாப்பு ஏற்பாடுகளை தீவிரப்படுத்தியுள்ளது. முக்கிய சாலைகளில் சரக்கு கன்டெய்னர்கள் வைத்து தடுப்புகள் ஏற்படுத்தப்பட்டுள்ளதுடன், கூடுதல் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.

போராட்டத்தால் போக்குவரத்து மற்றும் சரக்கு விநியோகத்தில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. போராட்டக்காரர்கள் தலைநகருக்குள் நுழைய அனுமதிக்கப்படமாட்டார்கள் என அரசு தரப்பு தெரிவித்துள்ளதால், இம்ரான் கான் ஆதரவாளர்களின் பேரணியைச் சுற்றி பதற்றமான சூழல் நிலவி வருகிறது.

இதையும் படிங்க : கேப்டன் ஸ்மித் மச்சாரை நலம் விசாரித்த துபாய் பட்டத்து இளவரசர்.. துணிச்சலுக்கு பாராட்டு!

நடுவானில் இருந்து தரையை நோக்கி கீழிறங்கிய விமானம்.. 180 உயிர்களை காப்பாற்றிய இந்திய விமானி? பரபரப்பு தகவல்கள்
Flydubai Flight

நடுவானில் இருந்து தரையை நோக்கி கீழிறங்கிய விமானம்.. 180 உயிர்களை காப்பாற்றிய இந்திய

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com