Actress Regina Cassandra: இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
Actress Regina Cassandra: இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.

Published on: October 4, 2026 at 3:00 pm
சென்னை, அக்.4, 2026: இயக்குநர் விஷால் வெங்கட் இயக்கத்தில் ரெஜினா கசாண்ட்ரா, நாசர், ரமேஷ் திலக் உள்ளிட்டோர் நடிக்கும் புதிய திரைப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது.
இன்னும் பெயரிடப்படாத இப்படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் நிறுவனம் மற்றும் தெலுங்கு திரையுலகின் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் இணைந்து தயாரிக்கின்றன. படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு தொடங்கியுள்ளதை அறிவிக்கும் வகையில், படக்குழு படப்பிடிப்பு தளத்தின் பின்னணிக் காட்சிகள் அடங்கிய சிறப்பு வீடியோவையும் வெளியிட்டுள்ளது.
‘சில நேரங்களில் சில மனிதர்கள்’, ‘பாம்’ உள்ளிட்ட படங்களை இயக்கிய விஷால் வெங்கட், இந்தப் படத்தை இயக்குகிறார். கதையை ஹரிஹரன் ராஜு எழுதியுள்ளார். ஒளிப்பதிவை எஸ்.கே.செல்வகுமார் மேற்கொள்ள, இசையை மலையாள இசையமைப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப் அமைக்கிறார். கலை இயக்கத்தை கே.மனோஜ் குமார் கவனிக்க, படத்தொகுப்பு பணிகளை ஜி.கே.பிரசன்னா மேற்கொள்கிறார்.
லோகேஷ் கனகராஜின் ஜி ஸ்குவாட் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் இணைந்து தயாரிக்கும் இப்படத்தில் நாசர், ரெஜினா கசாண்ட்ரா, ரமேஷ் திலக் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்தின் கூடுதல் நடிகர்கள் மற்றும் கதைக்களம் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகவில்லை. இப்படம் விறுவிறுப்பான டிராமா-த்ரில்லர் கதைக்களத்தில் உருவாகி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. படத்தின் தலைப்பு விரைவில் அறிவிக்கப்படும் என படக்குழு தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : நடிகர் மம்முட்டிக்கு நன்றி.. டோரதி கார்த்திக் சுப்புராஜ்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com