Anushka Ranjan: நடிகை அனுஷ்கா ரஞ்சன், குழந்தை பெறுவதற்காக மேற்கொண்ட ஐ.வி.எஃப். சிகிச்சை அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
Anushka Ranjan: நடிகை அனுஷ்கா ரஞ்சன், குழந்தை பெறுவதற்காக மேற்கொண்ட ஐ.வி.எஃப். சிகிச்சை அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.

Published on: October 4, 2026 at 2:44 pm
சென்னை, அக்.4, 2026: நடிகை அனுஷ்கா ரஞ்சன், குழந்தை பெறுவதற்காக மேற்கொண்ட ஐ.வி.எஃப் சிகிச்சை அனுபவம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார்.
நேஹா தூபியா மற்றும் அங்கத் பேடி தொகுத்து வழங்கும் ‘Double Date’ நிகழ்ச்சியில் பங்கேற்ற அவர், தனது கணவர் ஆதித்யா சீலுடன் முதலில் இயற்கையான முறையில் குழந்தை பெற முயற்சித்ததாக தெரிவித்தார். மருத்துவர்களின் ஆலோசனைப்படி ஆறு மாதங்கள் முதல் ஓராண்டு வரை முயற்சி செய்த பின்னர், ஐ.வி.எஃப்-க்கு முந்தைய குறைந்த தீவிரம் கொண்ட சிகிச்சையான ஐ.யூ.ஐ முறையை பரிசீலித்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
ஐ.யூ.ஐ சிகிச்சையிலும் மருந்துகள் மற்றும் ஊசிகள் எடுத்துக்கொள்ள வேண்டியிருந்ததாக அனுஷ்கா தெரிவித்துள்ளார். இந்த சிகிச்சை முறையில் ஏற்பட்ட உடல் ரீதியான மாற்றங்கள் மற்றும் மருந்துகளின் தாக்கம் தன்னை மனரீதியாக பாதித்ததாகவும், பின்னர் ஐ.வி.எஃப் சிகிச்சையை தேர்வு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். குழந்தை பெறுவதில் ஏற்பட்ட சிரமம் காரணமாக, தன்னுடைய உடலில் ஏதேனும் குறைபாடு இருக்கிறதோ என்ற எண்ணமும், பிறரிடம் இதைப் பற்றி கூறுவதில் சங்கடமும் ஏற்பட்டதாக அனுஷ்கா பகிர்ந்துள்ளார்.
இதனிடையே, அனுஷ்காவின் ஐ.வி.எஃப் சிகிச்சை காலத்தில் அவருக்கு ஏற்பட்ட உடல் மற்றும் உணர்வுப்பூர்வமான சிரமங்களை நேரில் பார்த்ததாக அவரது கணவர் ஆதித்யா சீல் தெரிவித்துள்ளார்.
ஒரு கட்டத்தில் சிகிச்சை பலனளிக்காவிட்டால் மீண்டும் ஐ.பி.எஃப் மேற்கொள்ள வேண்டாம் என்று முடிவு செய்ததாகவும் அவர் கூறியுள்ளார். மேலும், உயிரியல் ரீதியாக குழந்தை பெற முடியாத சூழல் ஏற்பட்டால், குழந்தையை தத்தெடுத்து வளர்ப்பதையும் இருவரும் ஒரு வாய்ப்பாகக் கருதியதாக தெரிவித்துள்ளனர். இந்த நிகழ்ச்சியில் பகிரப்பட்ட தகவல்கள், அவர்கள் இரட்டைக் குழந்தைகளை வரவேற்பதற்கு முன்பு பதிவு செய்யப்பட்டதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
இதையும் படிங்க : காந்தி ஜெயந்தி.. நாடு முழுக்க 2.42 லட்சம் கிராம சபை கூட்டங்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com