கன்னியாகுமரியில் பரபரப்பு.. ஆஸ்திரியா சுற்றுலாப் பயணிக்கு அடி!

Austrian Tourist Attacked: ஆஸ்திரியா நாட்டைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி தாக்கப்பட்ட சம்பவம் கன்னியாகுமரியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Published on: October 4, 2026 at 1:40 pm

கன்னியாகுமரி, அக்.4, 2026: கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அண்ணா பேருந்து நிலையத்தில் ஆஸ்திரியாவைச் சேர்ந்த சுற்றுலாப் பயணி ஒருவர் தாக்கப்பட்ட சம்பவத்தில், முன்னாள் ராணுவ வீரரை போலீசார் கைது செய்துள்ளனர்.

ஆஸ்திரிய தலைநகர் வியன்னாவைச் சேர்ந்த 60 வயதான தாமஸ் கொரோஸ்கென் ஸ்கை, சுற்றுலா பயணமாக இந்தியா வந்திருந்த நிலையில், கடந்த 10 நாட்களாக கன்னியாகுமரி மாவட்டத்தில் தங்கி பல்வேறு சுற்றுலாத் தலங்களை பார்வையிட்டு வந்துள்ளார். நாகர்கோவிலில் உள்ள விடுதி ஒன்றில் தங்கியிருந்த அவர், வெள்ளிக்கிழமை கன்னியாகுமரி செல்வதற்காக அண்ணா பேருந்து நிலையத்துக்கு சென்று அரசு பேருந்தில் ஏறியுள்ளார்.

பேருந்தில் சுற்றுலாப் பயணிக்கும் போது தாமஸ் கொரோஸ்கென் ஸ்கைக்கும், பேருந்து நடத்துநருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. அப்போது அதே பேருந்தில் பயணித்த விளவங்கோடு பகுதியைச் சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் பாபு, தகராறில் தலையிட்டு இருவரிடமும் விசாரித்துள்ளார். இதையடுத்து பாபுவுக்கும் தாமஸுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாகவும், பின்னர் அது கைகலப்பாக மாறியதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர். இதில் ஆத்திரமடைந்த பாபு, தாமஸை பலமுறை தாக்கியதாகவும், தாக்குதலில் அவர் பேருந்தின் ஜன்னல் கண்ணாடியில் மோதி காயமடைந்து ரத்தம் வழிந்த நிலையில் கீழே இறங்கியதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காயமடைந்த தாமஸ், நாகர்கோவில் கோட்டார் காவல் நிலையத்துக்கு சென்று புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் அவரை மீட்டு ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளித்தனர். தொடர்ந்து புகாரின் அடிப்படையில் விசாரணை மேற்கொண்ட போலீசார், முன்னாள் ராணுவ வீரர் பாபுவை கைது செய்தனர். சம்பவம் தொடர்பாக போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : மீன் ஏற்றிச் சென்ற மினிலாரியில் ரூ.3 கோடி கஞ்சா.. திருநெல்வேலியில் பரபரப்பு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com