பெண் வேட்பாளர் மீதான உருவக் கேலி.. மு.க ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்!

MK Stalin: தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.வெ.க. வேட்பாளர் பி.சத்தியபாமா குறித்து உடல் தோற்றத்தை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, தேர்தல் ஆணையத்தில் த.வெ.க. புகார் அளித்துள்ளது.

Published on: October 3, 2026 at 9:47 pm

சென்னை, அக்.3, 2026: தாராபுரம் சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தேர்தல் பிரசாரத்தில் தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின், த.வெ.க. வேட்பாளர் பி.சத்தியபாமா குறித்து உடல் தோற்றத்தை விமர்சிக்கும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறி, தேர்தல் ஆணையத்தில் த.வெ.க. புகார் அளித்துள்ளது. அக்டோபர் 2-ஆம் தேதி தாராபுரத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்தில் ஸ்டாலின் பேசிய கருத்துகள், வேட்பாளரின் அரசியல் நிலைப்பாடு அல்லது பொது வாழ்க்கை தொடர்பானவை அல்ல என்றும், அவரது உடல் தோற்றத்தை கேலி செய்யும் வகையில் இருந்ததாகவும் த.வெ.க. தரப்பில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

தமிழக தலைமைத் தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக்கிடம் த.வெ.க. பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஆதவ் அர்ஜுனா அளித்த புகாரில், இந்தக் கருத்து தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறுவதாகக் கூறப்பட்டுள்ளது. மேலும், ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ள நட்சத்திரப் பிரசாரகர் அந்தஸ்தை ரத்து செய்ய வேண்டும் என்றும், திருப்பூர் மாவட்ட தேர்தல் அதிகாரி மூலம் வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் தேர்தல் ஆணையத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக, பெண்கள் மீதான துன்புறுத்தல் தடுப்புச் சட்டம், 1998-ன் பிரிவு 4-ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் த.வெ.க. தரப்பு வலியுறுத்தியுள்ளது.

இதனிடையே, த.வெ.க. தலைவர் மற்றும் முதலமைச்சர் ஜோசப் விஜய்யும் ஸ்டாலினின் கருத்துக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். சத்தியபாமாவின் உடல் தோற்றத்தை கேலி செய்யும் வகையில் ஸ்டாலின் பேசியதாக அவர் குற்றம்சாட்டியுள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக த.வெ.க. தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்துள்ள நிலையில், தாராபுரம் மற்றும் மதுராந்தகம் இடைத்தேர்தல்களுக்கான பிரசாரம் அக்டோபர் 4-ஆம் தேதி மாலை 6 மணியுடன் நிறைவடைய உள்ளது.

இதையும் படிங்க : தி.மு.க. தலைவர்கள் கட்டுப்பாட்டுடன் பேச வேண்டும்.. அமைச்சர் ரமேஷ்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com