ஏரியில் மண் எடுக்கப்பட்டதாக புகார்.. வழக்கை ரத்து செய்யக்கோரி எ.வ வேலு மகன் மனு!

EV Velu,: ஏரியில் மண் எடுக்கப்பட்டதாக புகார் எழுந்துள்ள நிலையில், வழக்கை ரத்து செய்யக் கோரி ஏ.வ வேலு மகன் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார்.

Published on: October 3, 2026 at 9:59 pm

சென்னை, அக்.3, 2026: தி.மு.க வடக்கு மண்டல இளைஞரணி மாநாட்டுக்காக ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கை ரத்து செய்யக் கோரி முன்னாள் அமைச்சரும் திருவண்ணாமலை சட்டப்பேரவை உறுப்பினருமான எ.வ.வேலு மற்றும் அவரது மகன் எ.வ.குமரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளனர்.

திருவண்ணாமலை மாவட்டம் மலப்பம்பாடியில் கடந்த 2025 டிசம்பர் 14-ஆம் தேதி நடைபெற்ற திமுக வடக்கு மண்டல இளைஞரணி மாநாட்டிற்காக அமைக்கப்பட்ட மாநாட்டு திடலை சமன்படுத்துவதற்காக, அருகிலுள்ள மலப்பம்பாடி ஏரியில் இருந்து மண் மற்றும் ஏரிப்படுகை பொருட்கள் அனுமதியின்றி எடுக்கப்பட்டதாக ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு இயக்குநரகம் (DVAC) பதிவு செய்த முதல் தகவல் அறிக்கையில் குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இந்த வழக்கு, அறப்போர் இயக்கம் சார்பில் 2026 ஆகஸ்ட் 14-ஆம் தேதி அளிக்கப்பட்ட புகாரின் அடிப்படையில், செப்டம்பர் 24-ஆம் தேதி பதிவு செய்யப்பட்டது. சுமார் 70.65 ஏக்கர் பரப்பளவு கொண்ட மலப்பம்பாடி ஏரியில் இருந்து சுமார் 8 ஏக்கர் பகுதியில் 45.72 லட்சம் கனஅடி அளவுக்கு மண் எடுக்கப்பட்டதாகவும், இதனால் அரசுக்கு ரூ.8.22 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டிருக்கலாம் என புகாரில் மதிப்பிடப்பட்டதாகவும் எஃப்ஐஆரில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், உரிய அனுமதிகளைப் பெறாமல் ஏரியில் இருந்து மண் எடுக்கப்பட்டு, மாநாட்டு திடலை சமன்படுத்த பயன்படுத்தப்பட்டதாகவும், இந்த விவகாரத்தில் வருவாய், மாநகராட்சி மற்றும் புவியியல் மற்றும் சுரங்கத்துறை அதிகாரிகளின் பங்கும் விசாரிக்கப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த குற்றச்சாட்டுகள் அடிப்படையற்றவை என எ.வ.வேலு மற்றும் எ.வ.குமரன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களுக்கு எதிராகப் பதிவு செய்யப்பட்ட எஃப்ஐஆரை ரத்து செய்ய வேண்டும் என்றும், வழக்கு நிலுவையில் இருப்பது தங்களது சட்டப்பூர்வ உரிமைகள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களாக மேற்கொள்ள வேண்டிய பணிகளை பாதிக்கும் என்றும் அவர்கள் மனுவில் கூறியுள்ளனர். எஃப்ஐஆரின் சான்று நகலை தாக்கல் செய்வதிலிருந்து விலக்கு அளித்து, மனுக்களை அவசரமாக விசாரிக்கவும் அவர்கள் கோரியுள்ளனர். இந்த மனுக்கள் நீதிபதி வி.லட்சுமி நாராயணன் முன்பு விரைவில் விசாரணைக்கு பட்டியலிடப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : பெண் வேட்பாளர் மீதான உருவக் கேலி.. மு.க ஸ்டாலினுக்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் புகார்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com