திருமண ஆசைகாட்டி ரூ.15.37 லட்சம் மோசடி? பெண் காவலர் உட்பட 3 பேர் கைது!

Marriage Fraud Case: திருவாரூர் அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.15.37 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரில், CRPF பெண் காவலர் செமிலா, அவரது தாய் மற்றும் சகோதரர் கைது செய்யப்பட்டனர். இதில் செமிலாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

Published on: October 2, 2026 at 6:58 pm

திருவாரூர் அக்.2, 2026: திருவாரூர் அருகே திருமணம் செய்து கொள்வதாகக் கூறி ரூ.15.37 லட்சம் மோசடி செய்ததாக அளிக்கப்பட்ட புகாரின் பேரில், மத்திய ரிசர்வ் காவல் படையைச் (CRPF) சேர்ந்த பெண் காவலர் உள்ளிட்ட மூன்று பேரை போலீசார் கைது செய்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டம், தென்னவராயநல்லூரைச் சேர்ந்த ராஜமாணிக்கம் (36), வெளிநாட்டில் பணியாற்றி வந்தபோது, தனது தூரத்து உறவினரான செமிலா (29) மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பல்வேறு தவணைகளில் பணம் வழங்கியதாகக் கூறப்படுகிறது. செமிலா தன்னைத் திருமணம் செய்து கொள்வார் என்ற நம்பிக்கையில் மொத்தம் ரூ.15.37 லட்சம் வழங்கியதாகத் தெரிகிறது.

இதற்கிடையே, செமிலா மற்றொரு மத்திய ரிசர்வ் காவல் படை காவலரைத் திருமணம் செய்து கொண்டதாகக் கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சியடைந்த ராஜமாணிக்கம், தன்னிடம் திருமணம் செய்து கொள்வதாகக் கூறி பணம் பெற்றதாகத் திருவாரூர் தாலுகா காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.

இந்தப் புகாரின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசார், செமிலா, அவரது தாய் சசிகலா மற்றும் சகோதரர் கோகுல்ராஜ் ஆகிய மூவரையும் கைது செய்தனர். பின்னர், நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட சசிகலா மற்றும் கோகுல்ராஜ் சிறையில் அடைக்கப்பட்டனர். செமிலாவுக்கு நீதிமன்றம் ஜாமீன் வழங்கியது.

இதையும் படிங்க : நமக்கே இது பத்தாது; எதற்காக இவர்கள்? மதுக்குடிக்கும் போது தகராறு.. நண்பர் கொலை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com