34 ஏக்கரில் பிரமாண்ட மேடை.. தாராபுரத்தில் நாளை முதலமைச்சர் விஜய் பிரசாரம்!

Vijay Dharapuram Campaign: தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நாளை பிரசாரம் மேற்கொள்கிறார். இதையொட்டி 34 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட பொதுக்கூட்ட மேடை அமைக்கும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

Published on: September 29, 2026 at 11:48 am

திருப்பூர், செப். 29 2026: திருப்பூர் மாவட்டம் தாராபுரம் (தனி) சட்டப்பேரவைத் தொகுதியில் இடைத்தேர்தல் நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் சத்யபாமாவை ஆதரித்து முதலமைச்சர் விஜய் நாளை (செப்டம்பர் 30) தாராபுரத்தில் நடைபெறும் பொதுக்கூட்டத்தில் பிரசாரம் மேற்கொள்ள உள்ளார். தமிழகத்தில் மதுராந்தகம் (தனி), தாராபுரம் (தனி) ஆகிய 2 தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அக்டோபர் 6-ம் தேதி நடைபெறுகிறது. இதையொட்டி அரசியல் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் வேட்பாளர்கள் தீவிர வாக்குசேகரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர்.

விஜய் பங்கேற்கும் பொதுக்கூட்டத்துக்காக தாராபுரம்-உடுமலை சாலையில் சுமார் 34 ஏக்கர் பரப்பளவில் இடம் தேர்வு செய்யப்பட்டு, அங்கு பிரமாண்ட பிரசார மேடை மற்றும் பந்தல் அமைக்கும் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. கூட்டத்தில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்கும் வகையில் ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்தைச் சுற்றிலும் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

பொதுக்கூட்டத்திற்கான ஏற்பாடுகளை அமைச்சர்கள் செங்கோட்டையன், அருண்குமார் உள்ளிட்ட கட்சியின் முக்கிய நிர்வாகிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து வருகின்றனர். மேடை, பந்தல் மற்றும் பாதுகாப்பு பணிகளை விரைந்து முடிப்பது தொடர்பாக நிர்வாகிகளுக்கு ஆலோசனைகளும் வழங்கப்பட்டு வருகின்றன. விஜய் கோவையில் இருந்து சாலை வழியாக தாராபுரம் செல்ல உள்ளதால், அவர் பயணிக்கும் பாதையில் தடுப்புகள் அமைப்பது உள்ளிட்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுகின்றன. சுமார் 2 ஆயிரம் போலீசார் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

தாராபுரம் இடைத்தேர்தலில் தவெக சார்பில் சத்யபாமா போட்டியிடுகிறார். இதனிடையே, தேர்தல் பிரசாரத்தின் இறுதி நாளான அக்டோபர் 4-ம் தேதி விஜய் ரோடு ஷோ நடத்தி வாக்குசேகரிப்பில் ஈடுபட உள்ளதாக கட்சி நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர். இதனால் தாராபுரத்தில் நாளைய பொதுக்கூட்டத்துக்கான ஏற்பாடுகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.

இதையும் படிங்க: தாய் மாமன் தங்க மோதிரம் திட்டம்.. மதுரை ராஜாஜி மருத்துவமனையில் விஜய்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com