Isakki Raja Arrested: தூத்துக்குடியில் பிரபல நகைக்கடையில் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் இசக்கி ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
Isakki Raja Arrested: தூத்துக்குடியில் பிரபல நகைக்கடையில் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் இசக்கி ராஜா என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

Published on: September 24, 2026 at 12:25 pm
Updated on: September 24, 2026 at 12:32 pm
தூத்துக்குடி, செப்.24, 2026: தூத்துக்குடியில் பிரபல நகைக்கடையில் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்த வழக்கில் 46 வயதான இசக்கி ராஜா என்பவர் கைது செய்யப்பட்டார். இவர் பசும்பொன் மக்கள் தேசம் கட்சி என்ற இயக்கத்தை நடத்திவருகிறார்.
தூத்துக்குடியில் உள்ள பிரபல கடை ஒன்றில் தூத்துக்குடி தபால்தந்தி காலனியை சேர்ந்த இசக்கிராஜா என்பவர் தங்க நகை வாங்கியுள்ளார். இநத நகையில் வேறு உலோகம் அதிக அளவில் கலந்து இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. இந்த நிலையில், பசும்பொன் மக்கள் தேசம் கட்சி என்ற இயக்கத்தை நடத்திவரும் இசக்கிராஜா கடையின் உரிமையாளர் மகராஜனிடம் ரூ.1 கோடி கேட்டு மிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையில், இதுதொடர்பாக கடையின் மேலாளர் சரவணக் குமார் தூத்துக்குடி மத்திய பாகம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இந்தப் புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இசக்கிராஜாவை கைது செய்து மாஜிஸ்திரேட்டு நீதிபதி முன்னிலையில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. முன்னதாக இசக்கி ராஜா ஆதரவாளர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீசார் தடியடி நடத்தி கலைத்தனர்.
இதையும் படிங்க : பெருந்தலைவர் காமராஜர் காலை உணவுத் திட்டம் : மாணவர்களுடன் அமர்ந்து காலை உணவு சாப்பிட்ட முதல்வர் விஜய்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.


© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com