நடிகைகள் அம்பிகா- ராதா மோதல்.. பின்னணி என்ன?

Ambika-Radha: சகோதரி நடிகைகள் அம்பிகா- ராதா இடையே ஏற்பட்ட மோதல் பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது.

Published on: September 24, 2026 at 5:17 pm

சென்னை, செப்.24, 2026: 1980-களில் தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த சகோதரிகள் அம்பிகா மற்றும் ராதா இடையே சொத்து மற்றும் காசோலை தொடர்பான விவகாரம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நடிகை ராதா, தனது சகோதரி அம்பிகா மற்றும் சகோதரர் மல்லிகார்ஜுன குஞ்சன் நாயர் ஆகியோர் தனது வீட்டில் இருந்து கையெழுத்திட்ட வெற்று காசோலைகளை எடுத்துச் சென்று, அவற்றைப் பயன்படுத்தி சுமார் ரூ.46 கோடியை சட்டவிரோதமாகப் பணமாக்க முயன்றதாக சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளதாக கூறப்படுகிறது.

ராதா அளித்த புகாரில், அம்பிகா தனது அறைக்குள் அத்துமீறி நுழைந்து கையெழுத்திட்ட காசோலைகளை எடுத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இந்தக் காசோலைகள் மூலம் மிகப்பெரிய தொகையை மோசடியாகப் பெற முயற்சி செய்யப்பட்டதாகவும் அவர் புகாரில் தெரிவித்துள்ளார். இந்தக் குற்றச்சாட்டுகள் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளிக்கப்பட்டுள்ள நிலையில், இரு தரப்பினருக்கும் இடையிலான குடும்ப மற்றும் சொத்து பிரச்சினை வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

இதனிடையே, ராதாவின் குற்றச்சாட்டுகளை நடிகை அம்பிகா திட்டவட்டமாக மறுத்துள்ளார். ராதா தனது தனிப்பட்ட பொருட்களை மிகவும் கவனமாகப் பாதுகாப்பவர் என்றும், எண் பூட்டு கொண்ட பைகளில் முக்கிய ஆவணங்களை வைத்திருப்பவர் என்றும் குறிப்பிட்ட அம்பிகா, அத்தகைய சூழலில் தனது அறையில் இருந்து காசோலைகளைத் திருடியதாக கூறப்படுவது சாத்தியமற்றது என தெரிவித்துள்ளார். தனது இளமை காலத்தில் சகோதரர்களுக்காக இரவு பகலாக உழைத்ததாகக் கூறிய அவர், தற்போது தன் மீது திருட்டு குற்றச்சாட்டு முன்வைக்கப்படுவது மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

மேலும், ராதாவின் மேலாளர் தங்களிடம் ஐந்து கையெழுத்திட்ட காசோலைகளை ஒப்படைத்ததாக அம்பிகா கூறியுள்ளார். ஏ.ஆர்.எஸ் சொத்து பங்குகள் மற்றும் தங்கம் தொடர்பான நிதி சமரச நடவடிக்கையின் ஒரு பகுதியாகவே அந்த காசோலைகள் வழங்கப்பட்டதாக அவர் விளக்கம் அளித்துள்ளார். ஏ.ஆர்.எஸ் கார்டன்ஸ் தன்னுடைய உழைப்பில் சம்பாதித்த பணத்தில் கட்டப்பட்டதாகவும், எம்.ஜி.ஆரின் ஆசீர்வாதத்துடன் அந்தப் பெயர் சூட்டப்பட்டதாகவும் அம்பிகா குறிப்பிட்டுள்ளார். அந்தப் பெயர் நீக்கப்பட்டதுடன், தனக்குரிய சொத்து பங்குகள் மறுக்கப்பட்டதாகக் கூறி சட்டரீதியான நடவடிக்கையை நாட வேண்டிய நிலை ஏற்பட்டதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இந்த விவகாரம் தொடர்பாக குடும்பத்திற்குள்ளேயே பலமுறை சமரசம் செய்ய முயற்சித்ததாக அம்பிகா கூறியுள்ளார். ஆனால், பிரச்சினை காவல்துறை புகார் மற்றும் சட்ட நடவடிக்கை வரை சென்றுள்ள நிலையில், தற்போது வழக்கு தொடர்பான சட்ட நடவடிக்கைகள் நடைபெற்று வருவதால், அது குறித்து மேலும் பொதுவெளியில் கருத்து தெரிவிக்க விரும்பவில்லை என்றும் அவர் தெரிவித்துள்ளார். இதனால், ரூ.46 கோடி தொடர்பான காசோலை குற்றச்சாட்டு, ஏ.ஆர்.எஸ் சொத்து பங்கு மற்றும் தங்கம் தொடர்பான விவகாரங்கள் குறித்து இரு தரப்பினரின் புகார்கள் மற்றும் விளக்கங்கள் அடிப்படையில் அடுத்தகட்ட சட்ட நடவடிக்கைகள் கவனம் பெற்றுள்ளன.

இதையும் படிங்க : பீகாரில் சிறுமிகளுக்கு நடந்த மோசமான நிகழ்வு.. நடிகை ஆயிஷா கான் கடும் கண்டனம்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com