பீகாரில் சிறுமிகளுக்கு நடந்த மோசமான நிகழ்வு.. நடிகை ஆயிஷா கான் கடும் கண்டனம்!

Ayesha Khan: பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் இரண்டு சிறார்களை ஒரு கும்பல் வழிமறித்து துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகியுள்ளது.

Published on: September 23, 2026 at 12:38 pm

Updated on: September 23, 2026 at 12:39 pm

புதுடெல்லி, செப்.23, 2026: பீகார் மாநிலம் ஜமுய் மாவட்டத்தில் இரண்டு சிறார்களை ஒரு கும்பல் வழிமறித்து துன்புறுத்தியதாக கூறப்படும் சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. செப்டம்பர் 19ஆம் தேதி மாலை, கோச்சிங் வகுப்பை முடித்துவிட்டு இருசக்கர வாகனத்தில் சென்ற 10ஆம் வகுப்பு மாணவியும் அவரது ஆண் நண்பரும் ஜமுய்-லக்ஷ்மிபூர் சாலையையொட்டிய பகுதியில் புகைப்படம் எடுக்கச் சென்றதாகவும், திரும்பி வந்தபோது ஒரு குழுவினரால் தடுத்து நிறுத்தப்பட்டதாகவும் போலீஸ் விசாரணையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அவர்களைத் தடுத்து நிறுத்திய கும்பல் ‘மோரல் போலிசிங்’ என்ற பெயரில் விசாரித்ததாகவும், பின்னர் சிறுவனை தாக்கியதுடன் சிறுமியிடம் பாலியல் ரீதியான துன்புறுத்தலில் ஈடுபட்டதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இந்தச் சம்பவத்தை அங்கிருந்த சிலர் செல்போனில் பதிவு செய்ததாகவும், அந்த வீடியோ பின்னர் சமூக வலைதளங்களில் பரவியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறப்பு விசாரணைக் குழுவை அமைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த சம்பவத்திற்கு நடிகை ஆயிஷா கான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். தனது இன்ஸ்டாகிராம் ஸ்டோரியில் அவர், பீகாரில் நடந்த சம்பவத்தின் வீடியோவைப் பார்த்தபோது மிகவும் வேதனையாக இருந்ததாகக் குறிப்பிட்டார். அச்சுறுத்தப்பட்டு, அவமானப்படுத்தப்பட்ட நிலையில் இருந்த இருவரைச் சுற்றி நின்றவர்கள் அவர்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக சம்பவத்தைப் பதிவு செய்ததாகக் கூறிய அவர், துன்புறுத்தலை ‘மோரல் போலிசிங்’ அல்லது கலாசாரம் என்ற பெயரில் நியாயப்படுத்துவதை நிறுத்த வேண்டும் என வலியுறுத்தினார்.

மேலும், சிறுமியின் உடை, நடத்தை உள்ளிட்டவற்றை முன்வைத்து அவருக்கே அறிவுரை வழங்கும் முயற்சிகளையும் ஆயிஷா கான் விமர்சித்தார். “யார் உங்களிடம் தீர்வு கேட்டது? யார் மோரல் போலிசிங் செய்யச் சொன்னது? அதற்கான உரிமையை உங்களுக்கு யார் கொடுத்தது?” என அவர் கேள்வி எழுப்பினார். சம்பவத்தைச் சுற்றியிருந்தவர்கள் தங்களது செல்போன்களில் பதிவு செய்து, அதை சமூக வலைதளங்களில் வெளியிட்டது மேலும் கவலைக்குரியது என்றும் அவர் குறிப்பிட்டார்.

இதனிடையே, இந்த வழக்கில் குற்றம்சாட்டப்பட்டவர்களுக்கு எதிராக போலீசார் நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். முக்கிய குற்றச்சாட்டுக்குள்ளான நந்தன் யாதவ் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், நந்தன் யாதவ் போலீஸ் நடவடிக்கையின்போது காலில் துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இதுவரை ஐந்து பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது; சிறார்களின் அடையாளங்களை சமூக வலைதளங்களில் வெளியிட்ட கணக்குகளுக்கும் போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: திருமண ஆடம்பர செலவு ஏன்? ‘அந்தப் பணத்தை’… ஸ்ருதிஹாசன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com