R.S. Bharathi: திரிஷா இந்நாட்டின் பிரதமரா எனக் கேள்வியெழுப்பியுள்ளார் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி.
R.S. Bharathi: திரிஷா இந்நாட்டின் பிரதமரா எனக் கேள்வியெழுப்பியுள்ளார் தி.மு.க.வின் அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ் பாரதி.

Published on: August 5, 2026 at 11:23 am
சென்னை, ஆக.5, 2026: சென்னை தேனாம்பேட்டையில் உள்ள அண்ணா அறிவாலயத்தில் செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி, உதயநிதி ஸ்டாலின் கைது விவகாரம் குறித்து கடுமையாக விமர்சித்தார். அவர், “தற்போது ஆட்சியில் இருக்கும் விஜய் சர்வாதிகாரத்தின் உச்சத்தில் செயல்படுகிறார். சட்டமன்றம் கூடவுள்ள நிலையில் எதிர்க்கட்சித் தலைவரை கைது செய்வது ஜனநாயக விரோதம்” என்று குற்றம்சாட்டினார்.
அவர் மேலும், “மு.க. ஸ்டாலின் ஆட்சியில் டெல்டா மாவட்டங்களுக்கு தண்ணீர் வந்து சேர்ந்தது. இதுகுறித்து கூட்டத்தில் யாரோ த்ரிஷாவை குறிப்பிட்டு கேட்டதற்கு உதயநிதி பதிலளித்தார். இதில் தவறு எதுவும் இல்லை. த்ரிஷா இந்த நாட்டின் பிரதமரா அல்லது முதலமைச்சரா? அவர் தனிப்பட்ட முறையில் எதுவும் தெரிவிக்கவில்லை. மக்கள் ஆரவாரத்தில் பேசுவது வழக்கமான ஒன்று. இதை தாங்கிக்கொள்ள முடியாமல் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது” என்றார்.
ஆர்.எஸ். பாரதி, “எம்.ஜி.ஆர்., ஜெயலலிதா, எடப்பாடி காலங்களில் பல்வேறு விமர்சனங்கள் நடந்துள்ளன. ஆனால் அவதூறு பேச்சு வழக்கில் கைது நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இன்று உதயநிதி மீது நடவடிக்கை எடுத்து அவரை ‘இளைய கலைஞர்’ என மக்கள் பாராட்டும் நிலைக்கு தள்ளியுள்ளார் முதலமைச்சர் விஜய்” என்று தெரிவித்தார்.
அவர் மேலும், “எதிர்க்கட்சித் தலைவர்களை கைது செய்து சட்டமன்றத்தில் பதில் கூறாமல் ஆளில்லா மைதானத்தில் பந்தாட நினைக்கிறார் முதலமைச்சர். உதயநிதி மீது நடவடிக்கை எடுக்கப்பட்டதன் மூலம் ஜனநாயகத்தை புறக்கணித்துள்ளார்” என்று சாடினார்.
த்ரிஷாவை மறைமுகமாக அரசியலுக்கு கொண்டுவரும் முயற்சியா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், “தமிழ்நாட்டில் எந்த அசிங்கம் வேண்டுமானாலும் நடக்கலாம். அந்த அசிங்கத்தில் இதுவும் ஒன்று என்றால் அதை தாங்கிக் கொண்டுதான் ஆக வேண்டும்” என்று கூறினார்.
இதையும் படிங்க : உதயநிதி ஸ்டாலின் பேச்சை அவரது வீட்டினர் ஏற்பார்களா? அமைச்சர் சி.டி. நிர்மல் குமார்
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.



© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com