அக்னிவீர் திட்டத்தில் 20 சதவீத மாநில இடஒதுக்கீடு கிடைக்குமா?.. தமிழ்நாடு, புதுச்சேரி நிலை என்ன?

Agniveer Scheme : அக்னிவீர் திட்டத்தில் 20 சதவீத மாநில இடஒதுக்கீடு கிடைக்குமா என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இதில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களின் நிலை என்ன தெரியுமா?

Published on: July 16, 2026 at 5:24 pm

சென்னை, ஜூலை 16, 2026 : மத்திய அரசு அனைத்து மாநிலங்களுக்கும், அக்னிவீர் திட்டத்தில் பணியாற்றிய இளைஞர்களுக்கு 20% வேலை ஒதுக்கீடு வழங்குமாறு பரிந்துரைத்துள்ளது. ஆனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் இதற்கான தனிப்பட்ட கொள்கை இன்னும் அறிவிக்கப்படவில்லை; மாநில அரசுகள் தங்கள் நிலைப்பாட்டை ஆய்வு செய்து வருகின்றன.

முன்னதாக, உள்துறை அமைச்சர் அமித்ஷா அனைத்து மாநிலங்களுக்கும் கடிதம் எழுதி, அக்னிவீர் திட்டத்தில் 4 ஆண்டுகள் பணியாற்றிய இளைஞர்களுக்கு 20% வேலை ஒதுக்கீடு வழங்குமாறு கேட்டுக்கொண்டுள்ளார்.

இந்த ஒதுக்கீடு போலீஸ், பாதுகாப்பு, தீயணைப்புத் துறை, சிறைச்சாலை காவலர், மாநில பேரிடர் மீட்பு படை போன்ற துறைகளில் வழங்கப்பட வேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஹரியானா, உத்தரப்பிரதேசம், குஜராத், டெல்லி போன்ற மாநிலங்கள் ஏற்கனவே 20% ஒதுக்கீட்டை நடைமுறைப்படுத்தியுள்ளன.

மேலும், உத்தரகாண்ட், மத்யபிரதேசம், சத்தீஸ்கர், ராஜஸ்தான், ஒடிசா, அசாம் போன்ற மாநிலங்கள் 10% ஒதுக்கீட்டை அறிவித்துள்ளன. பஞ்சாப் அரசு இதுதொடர்பான கொள்கை தயாரிப்பில் ஈடுபட்டுவருகிறது. இருப்பினும், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மாநிலங்களில் 20% ஒதுக்கீடு தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகவில்லை.

மாநில அரசுகள், மத்திய அரசின் பரிந்துரையை ஆய்வு செய்து, தங்கள் மாநில வேலைவாய்ப்பு கொள்கைகளுடன் பொருந்துமாறு முடிவு எடுக்க உள்ளன. அக்னிவீர் திட்டம் 2022-இல் அறிமுகப்படுத்தப்பட்டது; இத்திட்டத்தில் இளைஞர்கள் 4 ஆண்டுகள் இராணுவத்தில் பணியாற்றி, பின்னர் பொதுவாழ்க்கைக்கு திரும்புவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க அண்ணா பல்கலை முன்னாள் துணைவேந்தருக்கு விருது.. புத்தகம் வெளியீடு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com