Ajith Kumar: நடிகர் அஜித்குமார் புதிய படங்களில் நடிக்கிறாரா? இயக்குனர் யார் தெரியுமா?
Ajith Kumar: நடிகர் அஜித்குமார் புதிய படங்களில் நடிக்கிறாரா? இயக்குனர் யார் தெரியுமா?

Published on: July 8, 2026 at 12:01 pm
சென்னை, ஜூலை 8 2026; அஜித் குமார் தற்போது இரண்டு புதிய படங்களில் நடிக்க உள்ளார். ‘AK 64’ என்ற காங்க்ஸ்டர் டிராமா படத்தை இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்குகிறார்; அதேசமயம் ‘கிளாடியேட்டர்ஸ்’ என்ற ரேசிங் சார்ந்த படத்தை இயக்குனர் ஏ. எல். விஜய் இயக்குகிறார். இதில், ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் கேங்ஸ்டர் திரைப்படம் தூத்துக்குடி துறைமுகத்தை மையமாகக் கொண்ட கதை எனக் கூறப்படுகிறது.
இந்தப் படத்துக்கு அனிருத் ரவிச்சந்திரன் இசையமைக்க உள்ளார். குட் பேட் அக்லி திரைப்படத்திற்கு பின்னர், ஆதிக் ரவிச்சந்திரன் அஜித்குமாரை மீண்டும் இயக்க உள்ளதால் இந்த படத்திற்கு எதிர்பார்ப்பு அதிகரித்து காணப்படுகிறது. மேலும் இந்த படத்தில் ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க உள்ளார் என்ற தகவலும் வெளியாகி உள்ளது.
ரேசிங் படம்
இயக்குனர் ஏ எல் விஜய் டைரக்ஷனில் உருவாகி வரும் கிளாடியேட்டர்ஸ், திரைப்படம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பயணத்தை மையமாகக் கொண்ட டாக்கு-டிராமா ஆகும். இது அஜித் குமாரின் 55 வது பிறந்த நாளான மே ஒன்றாம் தேதி 2026 ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க; ஜிடி நாயுடு படத்தில் பெரியார் கேரக்டர் நீங்கதானா? சத்யராஜ் கலகல பதில்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com