பெரம்பூர் வெற்றிக்கு எதிரான வழக்கு: முதலமைச்சர் விஜய் பதிலளிக்க உத்தரவு

HC Seeks Vijay’s Reply : 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு தொகுதிகளில் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் பெற்ற வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட நான்கு தேர்தல் மனுக்களில், மூன்று வாரங்களுக்குள் பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Published on: July 7, 2026 at 1:34 pm

சென்னை, ஜூலை 7, 2026: 2026 தமிழக சட்டசபைத் தேர்தலில் தமிழக வெற்றிக் கழக (TVK) தலைவர் முதலமைச்சர் சி. ஜோசப் விஜய், பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரு தொகுதிகளிலும் போட்டியிட்டு வெற்றி பெற்றார். பின்னர் பெரம்பூர் தொகுதியை தக்கவைத்துக்கொண்டு, திருச்சி கிழக்கு எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தார். இதையடுத்து, அவரது இரு தொகுதி வெற்றியையும் எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் மொத்தம் நான்கு தேர்தல் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

பெரம்பூர் தொகுதியில் விஜயின் வெற்றியை ரத்து செய்யக் கோரி, தோல்வியடைந்த தி.மு.க. வேட்பாளர் ஆர்.டி. சேகர் மற்றும் வாக்காளர்களான தினேஷ், லட்சுமி நரசிம்மன் ஆகியோர் தனித்தனியாக மனுக்கள் தாக்கல் செய்துள்ளனர். மேலும், திருச்சி கிழக்கு தொகுதியில் விஜயின் வெற்றியை எதிர்த்து, அங்கு போட்டியிட்ட முன்னாள் தி.மு.க. வேட்பாளர் இனிகோ இருதயராஜ் தனி தேர்தல் மனுவை தாக்கல் செய்துள்ளார்.

இந்த மனுக்கள் நீதிபதி வி. லட்சுமிநாராயணன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தபோது, முதல்-அமைச்சர் சி. ஜோசப் விஜய் மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிடப்பட்டது. பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்கிய நீதிமன்றம், வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை பின்னர் நடைபெறும் தேதிக்கு ஒத்திவைத்தது.

இதேபோல், அமைச்சர் ஆதவ் அர்ஜுனா மற்றும் முன்னாள் அமைச்சர் ஈ.வி. வேலு ஆகியோரின் தேர்தல் வெற்றியை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட தேர்தல் மனுக்களிலும், மூன்று வாரங்களுக்குள் பதில் மனு தாக்கல் செய்ய சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதில்கள் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, அனைத்து தேர்தல் மனுக்களும் அடுத்த கட்ட விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட உள்ளன.

இதையும் படிங்க : ஆர்.எஸ்.எஸ் பெற்றெடுத்த பிள்ளை என த.வெ.க-வை விமர்சித்திருக்கிறோம்.. தொல். திருமாவளவன்

செங்கல்பட்டு செல்கிறார் முதலமைச்சர் விஜய்.. நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு திட்டத்தில் ஆய்வு!
CM Vijay to Visit Chengalpattu Today

செங்கல்பட்டு செல்கிறார் முதலமைச்சர் விஜய்.. நெம்மேலி கடல்நீர் சுத்திகரிப்பு திட்டத்தில் ஆய்வு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com