விமானம் மூலம் சென்னை செல்லும் அரசு மாணாக்கர்கள்.. முன்னாள் எம்.பி அறிவிப்பு

EX MP Soundararajan Felicitates Students : பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை தனது சொந்த செலவில் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து செல்லும் திட்டத்தை முன்னாள் எம்.பி சௌந்தரராஜன் அறிவித்துள்ளார்.

Published on: June 4, 2026 at 3:09 pm

திருநெல்வேலி, ஜூன் 4, 2026: திருநெல்வேலி மாவட்டம் செட்டிகுளம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்ற பாராட்டு விழாவில், பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் சிறப்பாக தேர்ச்சி பெற்று முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவ, மாணவிகளுக்கு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பி. சௌந்தரராஜன் பரிசுத்தொகை மற்றும் நினைவுக் கேடயங்களை வழங்கி கௌரவித்தார். மேலும், நூற்றுக்கு நூறு மதிப்பெண் பெற்றவர்களையும், 95% மேல் மதிப்பெண் பெற்ற மாணவர்களையும் சேர்த்து இரண்டு நாட்கள் இன்பச் சுற்றுலா அழைத்து செல்லும் திட்டத்தையும் அறிவித்தார்.

இந்த நிகழ்ச்சியில் அவர், “அரசுப் பள்ளி மாணவர்கள் தனித்திறமையுடன் பல்வேறு துறைகளில் சாதனை படைத்து வருகின்றனர். கல்வி மட்டுமே வாழ்க்கையில் உயர்ந்த நிலையை அடைய வழிகாட்டும். மாணவர்கள் தன்னம்பிக்கையுடன் தொடர்ந்து முயற்சி செய்தால் எந்த இலக்கையும் எட்ட முடியும்” என்று அறிவுரை வழங்கினார்.

மேலும், பத்தாம் மற்றும் பன்னிரண்டாம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களை தனது சொந்த செலவில் விமானம் மூலம் சென்னைக்கு அழைத்து சென்று அங்குள்ள முக்கிய இடங்களை பார்வையிடும் வகையில் இன்பச் சுற்றுலா ஏற்பாடு செய்வதாக அறிவித்தார். இந்த அறிவிப்பை மாணவர்கள், பெற்றோர்கள் மற்றும் ஆசிரியர்கள் கைதட்டி வரவேற்றனர்.

நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் டாக்டர் பேசில் கஹாரின் தலைமையில் நடைபெற்றது. முன்னாள் மாணவர் சங்க நிர்வாகிகள், பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் திரளாக கலந்து கொண்டனர். முடிவில் நல்லாசிரியர் ஜேசு நன்றி உரையாற்றினார்.

இதையும் படிங்க : 14 வயது சிறுமிக்கு மது கொடுத்து பாலியல் தொல்லை.. கார் டிரைவருக்கு வலை

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com