சிஐஎஸ்எஃப் கட்டுப்பாட்டில் மீன்பிடி துறைமுகங்கள்.. எஸ்.டி.பி.ஐ எதிர்ப்பு

SDPI : சிஐஎஸ்எஃப் கட்டுப்பாட்டில் மீன்பிடி துறைமுகங்கள் கொண்டுவரும் திட்டத்துக்கு எஸ்.டி.பி.ஐ கட்சி எதிர்ப்பு தெரிவித்துள்ளது.

Published on: June 4, 2026 at 3:13 pm

திருநெல்வேலி, ஜூன் 4, 2026: ஒன்றிய அரசு, நாட்டின் 1,200 மீன்பிடி துறைமுகங்களை சிஐஎஸ்எஃப் கட்டுப்பாட்டில் கொண்டுவரும் திட்டம் குறித்து எஸ்டிபிஐ கட்சி கடுமையாக எதிர்ப்பு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் காசிமேடு, தூத்துக்குடி, நாகப்பட்டினம், பூம்புகார், தேங்காய்ப்பட்டினம் உள்ளிட்ட துறைமுகங்கள் மத்திய பாதுகாப்புப் படையின் நேரடி கண்காணிப்புக்குள் செல்லும் அபாயம் இருப்பதாக அவர்கள் எச்சரித்துள்ளனர்.

மீன்பிடி துறைமுகங்கள் விமான நிலையம் அல்லது கப்பல் கட்டும் தளங்களைப் போல கடுமையான பாதுகாப்பு விதிகளுக்கு உட்படுத்தப்படுவது நடைமுறைக்கு சாத்தியமற்றது என்றும், ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள், படகுகள் இயங்கும் சூழலில் இது பெரும் சிக்கல்களை ஏற்படுத்தும் என்றும் எஸ்டிபிஐ வலியுறுத்தியுள்ளது. பயோமெட்ரிக் கண்காணிப்பு, ஸ்மார்ட் அடையாள அட்டை, கடுமையான நுழைவுக் கட்டுப்பாடுகள் போன்றவை மீனவர்களின் சுதந்திரத்தை பறிக்கும் நடவடிக்கையாகக் கருதப்படுகிறது.

இந்த திட்டம் நடைமுறைக்கு வந்தால், மீன் வணிகத்தின் வேகம் குறையும், தொழிலாளர்கள், வியாபாரிகள், ஐஸ் ஃபேக்டரி ஊழியர்கள் ஆகியோரின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும். மேலும், துறைமுகப் பயன்பாட்டுக் கட்டணமாக கூடுதல் செலவுகள் விதிக்கப்பட வாய்ப்பு உள்ளதால், ஏற்கனவே நலிவடைந்துள்ள மீன்பிடித் துறை மேலும் வீழ்ச்சியடையும் அபாயம் உள்ளது.

மாநில அரசின் உரிமையை பறிக்கும் இந்த நடவடிக்கையை தமிழக அரசு அனுமதிக்கக் கூடாது என்றும், ஒன்றிய அரசு உடனடியாக இந்த திட்டத்திலிருந்து பின்வாங்க வேண்டும் என்றும் எஸ்டிபிஐ கட்சி வலியுறுத்தியுள்ளது. மீனவர்களின் உரிமைகள், கலாச்சாரம், வாழ்வாதாரம் ஆகியவற்றை காக்கும் போராட்டத்தில் எஸ்டிபிஐ எப்போதும் தோளோடு தோள் நிற்கும் என மாநில தலைவர் முகம்மது முபாரக் தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க : 125 நாள் வேலை திட்ட நிதி குறைப்பு.. தமிழக அரசை எச்சரிக்கும் அன்புமணி

சில்வண்டு சிக்கும், சிறுத்தை சிக்காதுலே.. திருச்சி சூர்யா அரெஸ்ட்.. யூ-ட்யூபர் முக்தார் எங்கே?
Trichy Surya Arrested

சில்வண்டு சிக்கும், சிறுத்தை சிக்காதுலே.. திருச்சி சூர்யா அரெஸ்ட்.. யூ-ட்யூபர் முக்தார் எங்கே?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com