ரூபாய் மதிப்பு தொடர் சரிவு.. ரெப்போ வட்டி விகிதத்தில் மாற்றம்?

Reserve bank of india : இந்திய ரிசர்வ் வங்கி, ரெப்போ வட்டி விகிதம் குறித்த அறிவிப்பை நாளை (ஜூன் 5, 2026) வெளியிடுகிறது.

Published on: June 4, 2026 at 3:18 pm

புதுடெல்லி, ஜூன் 4, 2026: இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்.பி.ஐ) வெள்ளிக்கிழமை (ஜூன் 5) அன்று வட்டி விகிதத் தீர்மானத்தை அறிவிக்க உள்ளது.

தற்போது ரெப்போ விகிதம் 5.25% ஆக உள்ளது, இதற்கிடையில், இதனை மாற்றாமல் வைத்திருக்க வாய்ப்புள்ளதாக பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். ஆனால், மத்திய கிழக்கு பிரச்சினைகள், ரூபாய் மதிப்பு குறைவு மற்றும் எரிபொருள் விலை உயர்வு ஆகியவை எதிர்காலத்தில் வட்டி உயர்வு அபாயத்தை அதிகரிக்கின்றன என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, பொருளாதார நிபுணர்கள் கூறுவதாவது, ரூபாய் மதிப்பு தொடர்ந்து பலவீனமடைந்தால், இறக்குமதி செலவுகள் அதிகரிக்கும். குறிப்பாக எரிபொருள் விலை உயர்வு, பணவீக்கத்தை மேலும் தூண்டக்கூடும். இதனால், இந்திய ரிசர்வ் வங்கி எதிர்காலத்தில் வட்டி உயர்வை பரிசீலிக்க வேண்டிய நிலை உருவாகலாம்.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் அரசியல் மற்றும் பொருளாதார பதற்றங்கள், உலகளாவிய எண்ணெய் விலையை உயர்த்தும் அபாயத்தை ஏற்படுத்துகின்றன. இந்தியா போன்ற நாடுகள், அதிக அளவில் எண்ணெய் இறக்குமதி செய்வதால், இதன் தாக்கம் நேரடியாக உள்நாட்டு பணவீக்கத்தில் பிரதிபலிக்கும்” என்றனர்.

மேலும், இந்தச் சூழ்நிலையில், இந்திய ரிசர்வ் வங்கி நாளைய கூட்டத்தில் வட்டி விகிதத்தை மாற்றாமல் வைத்தாலும், 2026-27 நிதியாண்டின் பின்னர் வட்டி உயர்வு ஏற்படும் அபாயம் அதிகரித்துள்ளதாக நிபுணர்கள் வலியுறுத்துகின்றனர்.
இதனால், கடன் வட்டி விகிதங்கள், வீட்டு கடன், வாகனக் கடன் போன்றவை எதிர்காலத்தில் அதிகரிக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க : வெளிநாட்டு பத்திர முதலீட்டாளர்களுக்கு ஜாக்பாட்? விரைவில் வரிச் சலுகை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com