Asian U-20 Athletics Championships: ஆசிய U-20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மொகலி வெங்கட்ராம் ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.
Asian U-20 Athletics Championships: ஆசிய U-20 தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்தியாவின் மொகலி வெங்கட்ராம் ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்துள்ளார்.

Published on: June 1, 2026 at 1:50 pm
ஹாங்காங், ஜுன் 1, 2026: ஆசிய U-20 தடகள சாம்பியன்ஷிப் போட்டி ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், இந்தியாவுக்கு இந்த ஆண்டுக்கான முதல் தங்கப்பதக்கத்தை மொகலி வெங்கட்ராம் பெற்றுத் தந்தார். ஆண்களுக்கான 800 மீட்டர் ஓட்டப் போட்டியில் கடுமையான போட்டி நிலவிய இறுதிச்சுற்றில் சிறப்பாக ஓடிய மொகலி வெங்கட்ராம், இறுதிக்கட்டத்தில் வேகத்தை அதிகரித்து முதலிடத்தை பிடித்தார்.
பதக்கம் வென்ற மகளிர் அணி
தொடர்ந்து, இந்திய மகளிர் 4×400 மீட்டர் தொடர் ஓட்ட அணியான பூமிகா, தஹுரா, செஹ்னூர் மற்றும் நீரு ஆகியோர் 3 நிமிடம் 38.07 வினாடிகளில் இலக்கை எட்டி தங்கப்பதக்கத்தை கைப்பற்றினர். மேலும், அவர்கள் புதிய சாம்பியன்ஷிப் சாதனையையும் பதிவு செய்தனர்.
அதேபோல், காஜல், பவானா, ஆர்த்தி மற்றும் நிபாம் இடம்பெற்ற மகளிர் 4×100 மீட்டர் அணி 45.05 வினாடிகளில் பந்தயத்தை முடித்து வெள்ளிப்பதக்கத்துடன் புதிய ஜூனியர் தேசிய சாதனையையும் படைத்தது.
ஆண்கள் தொடர் ஓட்டம்
ஆண்களுக்கான 4×400 மீட்டர் தொடர் ஓட்டத்தில் பியூஷ் ராஜ், சயீத் சபீர், ரஞ்சித் குமார் மற்றும் முகமது அஷ்பாக் ஆகியோர் அடங்கிய இந்திய அணி வெண்கலப் பதக்கம் வென்றது. அவர்கள் 3 நிமிடம் 5.54 வினாடிகளில் பந்தயத்தை நிறைவு செய்து புதிய ஜூனியர் தேசிய சாதனையையும் உருவாக்கினர்.
இந்த ஆசிய சாம்பியன்ஷிப் போட்டி, ஆகஸ்ட் 5 முதல் 9 வரை அமெரிக்காவின் ஓரிகன் மாநிலம் யூஜினில் நடைபெற உள்ளது. இது உலக 20 வயதுக்குட்பட்ட தடகள சாம்பியன்ஷிப் தொடருக்கான தகுதிச் சுற்றாகவும் செயல்படுகிறது.
இதையும் படிங்க: கோலியின் கம்பீரம்…குஜராத்தை சாய்த்த பெங்களூரு..கோப்பையை தக்க வைத்தது ஆர்.சி.பி.
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com