தென்காசி–திருநெல்வேலியில் முகமூடி கும்பல் தாக்குதல்: 8 பேர் கைது

Eight Held in Masked Assault : தென்காசி- திருநெல்வேலியில் முகமூடி அணிந்து தாக்குதல் நடத்திய வழக்கில் 8 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Published on: May 30, 2026 at 7:48 pm

திருநெல்வேலி, மே 30, 2026: தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே நெட்டூரில் நடைபெற்ற திருமண வீட்டுக்குள் முகமூடி அணிந்த கும்பல் அரிவாள்களுடன் புகுந்து பொதுமக்களை வெட்டிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இதில் பலர் படுகாயம் அடைந்தனர்.

திருமண வீட்டில் தாக்குதல் நடத்திய கும்பல், வாகனங்களையும் கடையையும் சேதப்படுத்தி தப்பிச் சென்றது. காயமடைந்தவர்களில் நான்கு பேர் நெல்லை அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த சம்பவத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து, காயமடைந்தவர்களின் உறவினர்கள் சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைத்தனர்.

அதே கும்பல் திருநெல்வேலி அருகே தெற்குப்பட்டி கிராமத்திலும் புகுந்து, அப்துல் ரகுமான் மற்றும் முபாரக் ஆகியோரை வெட்டியதாக தெரியவந்துள்ளது. இருவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

ஒரே நாளில் 8 பேர் அரிவாளால் வெட்டப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், DIG தேஷ்முக் சேகர் சஞ்சய் உத்தரவின் பேரில் 4 தனிப்படைகள் அமைக்கப்பட்டு கும்பலை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

தேடுதல் வேட்டையில், சுத்தமல்லி காவல் நிலைய எல்லைக்குள் கல்லூரில் 3 சிறுவர்கள் உட்பட 4 பேர் டிரோன் உதவியுடன் கைது செய்யப்பட்டனர். தொடர்ந்து மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டு ரகசிய இடத்தில் விசாரணை நடத்தப்படுகிறது.

விசாரணையில், திருமண பேனர் வைக்கப்பட்டதை எதிர்த்து மற்றொரு சமூகத்தை சேர்ந்த இளைஞர்கள் வாக்குவாதம் செய்தது தாக்குதலுக்குக் காரணமாக இருந்தது தெரியவந்துள்ளது.

இந்தச் சம்பவம் தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : திருவள்ளூரில் வடமாநில இளைஞர் கொலை.. பரபரப்பு தகவல்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com