Telangana Lawyer’s Murder : தெலங்கானாவில் வழக்கறிஞர் கொலை வழக்கில், மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.
Telangana Lawyer’s Murder : தெலங்கானாவில் வழக்கறிஞர் கொலை வழக்கில், மாநில காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

Published on: May 30, 2026 at 6:35 pm
ஹைதராபாத், மே 30, 2026 : தெலங்கானா மாநிலத்தை உலுக்கிய வழக்கறிஞர் கொலை வழக்கில், காங்கிரஸ் தலைவர் முஜாஹித் ஆலம் கான் உட்பட ஏழு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மே 23, காலை 5.45 மணியளவில் ஹைதராபாத்-தில் உள்ள நம்பள்ளியில் வழக்கறிஞர் மொயிசுத்தீன் தனது தினசரி நீச்சல் பயிற்சிக்குப் பிறகு வாகனத்திற்குச் செல்லும் போது, வேகமாக வந்த மஹிந்திரா ஸ்கார்பியோ வாகனம் மோதி கடுமையாக காயமடைந்தார்.
இந்நிலையில், அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டாலும் உயிரிழந்தார். இந்த நிலையில் போலீசார் நடத்திய விசாரணையில், மலக் பேட் மற்றும் லக்டிகாபூல் பகுதிகளில் உள்ள வக்ஃப் சொத்துகள் தொடர்பான நீண்டகால நிலுவைத் தகராறு இருந்தது தெரியவந்தது.
இது தொடர்பாக புகார் அளிக்கப்பட்டதால் , வழக்கறிஞர் மொயிசுத்தீன் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, முஜாஹித் ஆலம் கானை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க : ஜம்மு காஷ்மீரில் பயங்கர காட்டுத் தீ.. பரபரப்பு வீடியோ காட்சிகள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com