Leader Movie OTT Release: லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான லீடர் திரைப்படம் ஒ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.
Leader Movie OTT Release: லெஜண்ட் சரவணன் நடிப்பில் வெளியான லீடர் திரைப்படம் ஒ.டி.டி. தளத்தில் வெளியாக உள்ளது.

Published on: May 30, 2026 at 6:41 pm
சென்னை, மே 30, 2026: லெஜண்ட் சரவணன் நடிப்பில் துரை செந்தில்குமார் இயக்கிய ‘லீடர்’ திரைப்படம் ஏப்ரல் 3ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. பாயல் ராஜ்புத், ஷாம், ஆண்ட்ரியா, லால், அம்ரிதா ஐயர் உள்ளிட்ட பலர் நடித்த இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்றது.
லெஜண்ட் சரவணா புரொடக்ஷன்ஸ் தயாரித்த இப்படத்தில், தனது குழந்தைக்காக சவால்களை எதிர்கொள்ளும் பாசமிகு தந்தையாக சரவணன் நடித்துள்ளார். அதிரடி சண்டைக் காட்சிகள், உணர்ச்சிப்பூர்வமான நடிப்பு, ஜிப்ரானின் இசை, வெங்கடேஷின் ஒளிப்பதிவு, பிரதீப் ராகவின் படத்தொகுப்பு ஆகியவை படத்தை விறுவிறுப்பாக அமைத்துள்ளன.
திரையரங்குகளில் வெற்றிகரமாக ஓடிய ‘லீடர்’ திரைப்படம், ரசிகர்கள் எதிர்பார்த்தபடி மே 29ஆம் தேதி அமேசான் பிரைம் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய நான்கு மொழிகளில் வெளியாகிறது.
கொரோனா காலத்திற்குப் பிறகு ஓடிடி தளங்கள் முக்கிய பொழுதுபோக்கு அம்சமாக மாறியுள்ள நிலையில், ‘லீடர்’ திரைப்படம் திரையரங்கில் பெற்ற வரவேற்பைப் போலவே ஓடிடியிலும் ரசிகர்களை கவரும் என படக்குழு நம்பிக்கை தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க : சாய் பல்லவி டூ ஸ்ரீலீலா வரை.. தென்னிந்திய சினிமாவை ஆளும் மருத்துவர்கள்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com