Governor Meeting : அ.தி.மு.க.வினர் கவர்னரை சந்தித்து தமிழக வெற்றிக் கழகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.
Governor Meeting : அ.தி.மு.க.வினர் கவர்னரை சந்தித்து தமிழக வெற்றிக் கழகம் மீது பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளனர்.

Published on: May 30, 2026 at 6:59 pm
சென்னை, மே 30, 2026: தமிழக வெற்றி கழகம் (தவெக) அரசு தலைமைச் செயலகத்தையே கட்சி அலுவலகமாக மாற்றியுள்ளதாகவும், குதிரை பேரத்தில் ஈடுபட்டுள்ளதாகவும் அதிமுக சார்பில் ஆளுநரிடம் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சமீபத்திய சட்டமன்ற தேர்தலில் தவெக 108 இடங்களில் வெற்றி பெற்று, காங்கிரஸ், விசிக, முஸ்லிம் லீக், இடதுசாரி கட்சிகளின் ஆதரவுடன் ஆட்சி அமைத்தது. திமுக 59 இடங்களிலும் அதிமுக 47 இடங்களிலும் வெற்றி பெற்றது.
நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்எல்ஏக்கள் 25 பேர் தவெக அரசுக்கு ஆதரவாக வாக்களித்ததால், அதிமுகவில் உட்கட்சி பூசல் ஏற்பட்டது. பின்னர் நான்கு அதிமுக எம்எல்ஏக்கள் ராஜிநாமா செய்து தவெகவில் இணைந்தனர்.
இதனால் அதிமுகவில் அதிருப்தி நிலவிய நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையை மீண்டும் ஏற்றுக்கொண்டு உட்கட்சி பூசல் முடிவுக்கு வந்தது.
அதிமுக எம்எல்ஏ அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தவெக அரசு குதிரை பேரத்தில் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு முன்வைத்தார். மேலும், சில அதிமுக எம்எல்ஏக்களை விலை கொடுத்து வாங்க முயற்சி நடப்பதாகவும் தெரிவித்தார்.
இதையடுத்து, அக்ரி கிருஷ்ணமூர்த்தி, தனபால் உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் ஆளுநர் ஆர்.வி. அர்லேகரை சந்தித்து புகார் மனு அளித்தனர்.
அந்த மனுவில், தலைமைச் செயலகத்தை கட்சி அலுவலகமாக மாற்றிய தவெக அரசு மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், குதிரை பேரம் குறித்து சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
புகார் மனு அளித்த பிறகு, அக்ரி கிருஷ்ணமூர்த்தி செய்தியாளர்களிடம், “எடப்பாடி பழனிசாமி அறிவுறுத்தலின்படி ஆளுநரிடம் புகார் அளித்தோம். குதிரை பேரத்தில் ஈடுபடுபவர்கள் மீது அரசியலமைப்புச் சட்டம் 167ன் கீழ் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று தெரிவித்தார்.
இதையும் படிங்க : திருவாரூரில் மகள் கண்முன்னே தந்தை படுகொலை.. ஜி.கே வாசன் கடும் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com