Delhi Heatwave Orange Alert : டெல்லியில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
Delhi Heatwave Orange Alert : டெல்லியில் வெப்ப அலை வீசக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

Published on: May 21, 2026 at 10:16 am
புதுடெல்லி, மே 21, 2026: டெல்லி, நோய்டா, காசியாபாத் பகுதிகளில் கடும் வெப்ப அலை காரணமாக இந்திய வானிலை ஆய்வு மையம் (ஐ.எம்.டி) ஆரஞ்சு எச்சரிக்கை வெளியிட்டுள்ளது.
மேலும்,‘வெப்ப காற்று’ எச்சரிக்கையை வெளியிட்டு, மக்கள் மிகுந்த கவனத்துடன் இருக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளது. அதில், வெப்பநிலை 45–47°C வரை உயர வாய்ப்பு உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி-என்சிஆர் வெப்பநிலை
இந்திய வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள எச்சரிக்கையில், டெல்லி சப்தர்ஜங் 44.5°C, பாலம் 44.9°C, ரிட்ஜ் 45.8°C, ஆயனகர் 45°C ஆகிய பகுதிகளில் வெப்பநிலை இருக்க கூடும்” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், நொய்டாவில் மின்சார தடைகள் காரணமாக மக்கள் மிகுந்த அவதியுற்றார்கள்.
இந்த நிலையில் இந்தப் பகுதிகளில் அடுத்த 5 நாள்களுக்கு மிகுந்த வெப்பக் காற்று வீசக் கூடும் எனவும் வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க ரஜினிகாந்த் படத்தில் நடிகை எடின் ரோஸ்.. கதாபாத்திரம் என்ன?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com