டாடா கம்யூனிகேஷன்ஸ் புதிய சி.இ.ஓ.. யார் இந்த கணபதி லட்சுமிநாராயணன்?

New Leadership at Tata Communications : இன்று பொறுப்பேற்கும் டாடா கம்யூனிகேஷன்ஸின் புதிய நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி கணபதி லட்சுமிநாராயணன் யார் தெரியுமா?

Published on: May 20, 2026 at 7:27 pm

சென்னை, மே 20, 2026: டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், கணபதி எஸ். லட்சுமிநாராயணனை மே 20 முதல் ஐந்து ஆண்டுகளுக்கு நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக நியமித்துள்ளது. பங்குதாரர்களின் ஒப்புதலுக்கு உட்பட்டு, அவரது பதவிக்காலம் மே 19, 2031 வரை நீடிக்கும்.

புதிய நியமனம்

டாடா கம்யூனிகேஷன்ஸ் இயக்குநர்கள் குழு, நியமனம் மற்றும் ஊதியக் குழுவின் பரிந்துரையின் அடிப்படையில் லட்சுமிநாராயணனை நியமித்துள்ளது. அவர் நிறுவனத்தின் இயக்குநர்கள் குழுவில் கூடுதல் இயக்குநராகவும் இணைந்துள்ளார்.

இவர், பன்னாட்டு நிறுவனங்கள், பி2பி ஸ்டார்ட்அப்கள் மற்றும் இந்திய நிறுவனங்களில் 30 ஆண்டுகளுக்கும் மேலான சர்வதேச நிர்வாக அனுபவம் கொண்டவர் ஆவார். முன்னதாக, இவர் ஜனவரி 2026இல், டாடா கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தால் சி.இ.ஓ ஆக நியமிக்கப்பட்டிருந்தார்.

மேலும் இவர் சர்வீஸ்நவ் நிறுவனத்தில் இந்தியா மற்றும் சார்ஸ் பிராந்தியத்திற்கான நிர்வாக இயக்குநர் மற்றும் குழு துணைத் தலைவராக பணியாற்றினார். இதுமட்டுமின்றி, ஏர்டெல் பிசினஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாகவும், பார்தி ஏர்டெல் நிறுவனத்தில் என்டர்பிரைஸ் வணிகப் பிரிவின் தலைவராகவும் இருந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : ஏற்றம் கண்ட பங்குச் சந்தை.. சென்செக்ஸ், நிஃப்டி எப்படி?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com