Cheque Fraud Case : காசோலை மோசடி வழக்கில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரின் உறவுக்கார பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.
Cheque Fraud Case : காசோலை மோசடி வழக்கில், தமிழக வெற்றிக் கழக சட்டமன்ற உறுப்பினரின் உறவுக்கார பெண்மணி கைது செய்யப்பட்டுள்ளார்.

Published on: May 20, 2026 at 6:33 pm
சென்னை, மே 20, 2026: ஆலந்தூர் சட்டமன்ற உறுப்பினர் ஹரீஷின் அத்தையான பிரேமாவதி (60), பத்தாண்டுகள் பழமையான காசோலை மோசடி வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். இவரை செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
செக் மோசடி- வழக்கு என்ன?
2014 ஜூலை மாதத்தில், பிரேமாவதி ஆலந்தூரைச் சேர்ந்த ஆர். ரவிசங்கர் என்பவரிடமிருந்து ரூ.2,12,500 கடனாக பெற்றதாக கூறப்படுகிறது. இதற்காக வழங்கிய காசோலை, வங்கிக் கணக்கில் போதிய நிதி இல்லாததால் திரும்பியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதையடுத்து, 2016ஆம் ஆண்டு புகார்தாரர் வழக்கு தொடர்ந்த நிலையில், விரைவு நீதிமன்றம் குற்றவாளி எனத் தீர்ப்பளித்தது. இந்த நிலையில், நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், செயின்ட் தாமஸ் மவுண்ட் காவல்துறையினர் பிரேமாவதியை வேளச்சேரி அன்னை இந்திரா நகரில் உள்ள இல்லத்தில் கைது செய்தனர்.
பின்னர், அவர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, பின்னர் மருத்துவ பரிசோதனைக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். மருத்துவர்கள், பிரேமாவதிக்கு உயர் இரத்த அழுத்தம் இருப்பதைக் கண்டறிந்தனர். மேலும், அவர் 2025 டிசம்பரில் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்துகொண்டிருந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இதனால், மேல்சிகிச்சைக்காக அவர் ஸ்டான்லி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு காவல்துறைக் காவலில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதையும் படிங்க : நீட் தேர்வு மாநில உரிமைக்கு எதிரானது.. அமைச்சர் அருண் ராஜ் கண்டனம்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com