அதிமுக முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், எம்.ஆர்.விஜயபாஸ்கர் தவெகவில் இணைந்தனர்!

AIADMK Ex-Ministers Join TVK : அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் இருவரும் தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) இணைந்தனர்.

Published on: July 2, 2026 at 5:23 pm

சென்னை, ஜூலை 2 2026: அதிமுகவில் இருந்து விலகிய முன்னாள் அமைச்சர்களான சி. விஜயபாஸ்கர், எம்.ஆர். விஜயபாஸ்கர் மற்றும் முன்னாள் அமைச்சர் எம்.எஸ்.எம். ஆனந்தன் ஆகியோர், மாமல்லபுரத்தில் நட்சத்திர விடுதியில் இன்று (வியாழக்கிழமை) நடைபெற்ற நிகழ்ச்சியில் அமைச்சர்கள் ஆனந்த், ஆதவ் அர்ஜுனா முன்னிலையில் தமிழக வெற்றிக் கழகத்தில் அதிகாரப்பூர்வமாக இணைந்தனர்.

முன்னதாக, சி. விஜயபாஸ்கர் மற்றும் எம்.ஆர். விஜயபாஸ்கர் ஆகியோர் அதிமுகவிலிருந்தும், தாங்கள் வகித்து வந்த சட்டமன்ற உறுப்பினர் பதவிகளிலிருந்தும் விலகியிருந்தனர். அதனைத் தொடர்ந்து அவர்கள் தவெகவில் இணையவுள்ளதாக கடந்த சில நாட்களாக தகவல்கள் வெளியாகி வந்த நிலையில், தற்போது அது அதிகாரப்பூர்வமாக உறுதியாகியுள்ளது.

இவர்களுடன் பல முன்னாள் எம்.எல்.ஏ.க்கள், மாவட்ட நிர்வாகிகள் மற்றும் நூற்றுக்கணக்கான ஆதரவாளர்களும் தவெகவில் இணைந்தனர். முன்னணி தலைவர்கள் தவெகவில் தொடர்ந்து இணைந்து வருவது, அதிமுகவுக்கு மேலும் பின்னடைவாக பார்க்கப்படுகிறது.

இந்த இணைப்பு விழாவில் பங்கேற்க கரூர், புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் இருந்து 200 பஸ்கள், 600 கார்கள் மூலம் 15 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நிர்வாகிகள் வந்திருந்தது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க நீங்க மஞ்ச பத்திரிகையா? திட்டமிட்டு வந்தீரா? கடும் கோபத்தில் வைகோ!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com