Vaiko Angry : ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நீங்க மஞ்ச பத்திரிகையா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
Vaiko Angry : ம.தி.மு.க பொதுச்செயலாளர் வைகோ, நீங்க மஞ்ச பத்திரிகையா? எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.

Published on: June 30, 2026 at 10:16 pm
சென்னை, ஜூன் 30, 2026: செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே காலவாக்கம் பகுதியில் நடைபெற்ற ம.தி.மு.க. கட்சி நிகழ்ச்சியில் பொதுச்செயலாளர் வைகோ கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார். கடந்த தி.மு.க. ஆட்சிக்காலத்தில் கமிஷன், கட்டிங், கரெப்ஷன் அதிகமாக இருந்ததால் மக்கள் வெறுப்பின் உச்சத்தில் இருந்தனர் என்றும், “இதை விஜய் ஒழித்துவிட்டார்” என்றும் அவர் தெரிவித்தார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய வைகோவிடம், “அப்படியென்றால் அப்போது கூட்டணியில் இருந்தபோது ஏன் இதுகுறித்து பேசவில்லை?” என்று ஒருவர் கேள்வி எழுப்பினார். இதனால் வைகோ ஆவேசமடைந்து, “கூட்டணியில் இருந்துகொண்டு தி.மு.க-வை விமர்சிப்பது அயோக்கியத்தனம். அது அரசியல் தர்மமும் நாகரிகமும் கிடையாது” என்று பதிலளித்தார்.
அந்த செய்தியாளர் தொடர்ந்து, “கூட்டணியில் இருந்தபோது விமர்சிக்காமல் இருந்தது மனசாட்சிக்கு விரோதமில்லையா?” என்று கேள்வி எழுப்பியதால், வைகோ மேலும் கோபமடைந்தார். “கூட்டணி தர்மத்துக்காக பேசாமல் இருந்தேன். அதுதான் சரியான அணுகுமுறை. கூட்டணியில் இருந்துகொண்டே விமர்சனம் செய்யக் கூடாது” என்று அவர் வலியுறுத்தினார்.
அப்போது அந்த செய்தியாளர் திருக்குறள் ஒன்றை மேற்கோள் காட்டி, “நேற்றிலிருந்துதானே நீங்கள் பேசுகிறீர்கள்” என்று கேள்வி எழுப்பினார். இதனால் வைகோ, “இந்த திருக்குறள் எல்லாம் என்னிடம் சொல்லாதீர்கள். நான் 1330 திருக்குறளும் சொல்வேன். ஆனால் கூட்டணியில் இருந்துகொண்டு விமர்சிப்பது நாகரீகமா?” என்று கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.
இறுதியில், வைகோ அந்த செய்தியாளரை நோக்கி, “நீங்கள் மஞ்சள் பத்திரிகையா? திட்டமிட்டு வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு இங்கே வேலை கிடையாது, வெளியே போகலாம்” என்று கூறியதால், அங்கே இருந்த ம.தி.மு.க. நிர்வாகிகள் அந்த செய்தியாளரை வெளியேற்றினர். இதனால் வைகோ செய்தியாளர் சந்திப்பு பரபரப்பாக முடிந்தது.
இதையும் படிங்க அண்ணாமலையை ஊட்டி வளர்க்கிறதா தி.மு.க? திருமுருகன் காந்தி கேள்வி
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com