அண்ணாமலையை ஊட்டி வளர்க்கிறதா தி.மு.க? திருமுருகன் காந்தி கேள்வி

Thirumurugan Gandhi: அண்ணாமலையை ஊட்டி வளர்க்கிறதா தி.மு.க என காட்டமாக கேள்வியெழுப்பியுள்ளார் மே 17 இயக்கத்தின் திருமுருகன் காந்தி.

Published on: June 30, 2026 at 9:58 pm

சென்னை, ஜூன் 30, 2026: தமிழக பா.ஜ.க முன்னாள் மாநிலத் தலைவரும், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்பின் நிறுவனருமான அண்ணாமலைக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட அவதூறு வழக்கை திமுக எம்.பி. டி.ஆர். பாலு திடீரென வாபஸ் பெற்றுள்ளார். இந்த முடிவு அரசியல் வட்டாரத்தில் பெரும் விவாதத்தை ஏற்படுத்திய நிலையில், சமூக செயற்பாட்டாளரும் மே 17 இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளருமான திருமுருகன் காந்தி இதனை கடுமையாக விமர்சித்துள்ளார்.

இது தொடர்பாக, தன் முகநூல் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் அவர், “அண்ணாமலை மீது திமுக பதிவு செய்த அவதூறு வழக்கை வாபஸ் பெறக்காரணம் என்ன? 2021-2026 காலத்தில் பியூஷ் மனுஷ் கொடுத்த வழக்கின் மீதும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. தீவிர ஆர்.எஸ்.எஸ். பிரமுகரான கல்யாணராமன், அண்ணாமலை ஊழல்கள் குறித்து ஆதாரங்களோடு வெளியிட்டிருந்தாலும், அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை” என்று சுட்டிக்காட்டினார்.

மேலும், “அண்ணாமலையின் மதவெறி தூண்டும் பிரச்சார பயணத்திற்கு தடையின்றி அனுமதி அளித்ததோடு, திமுகவின் மூத்த பொறுப்பாளர்கள், அமைச்சர்கள் உதவியளித்தனர் என்ற குற்றச்சாட்டுகள் தோழர்களிடமிருந்து வந்துள்ளன. திராவிடத்தை இழிவு செய்த மாரிதாஸ், சாட்டை துரைமுருகன் போன்றோரின் வீடியோக்களை திமுக ஐ.டி. விங் குழுவின் சிலர் ஆதரித்து பரப்புவது அரசியல் முறைகேடு” என அவர் குறிப்பிட்டுள்ளார்.

அவர் மேலும், “மே 17 இயக்கம் உட்பட பல சமூகச் செயற்பாட்டாளர்கள் இன்னும் போராட்ட வழக்குகளைச் சுமந்து வருகின்றனர். ஆனால் அண்ணாமலைக்கு மட்டும் முழு பாதுகாப்பும் ஆதரவும் வழங்கப்படுகிறது. திமுக, அண்ணாமலையை ஊட்டி வளர்ப்பது, பாம்புக்கு பால் வார்க்கும் முட்டாள்தனத்திற்கு ஒப்பானது. ‘திமுக ஃபைல்ஸ்’, ‘அறிவாலயத்தை செங்கல்-செங்கல்லாக பிரிப்பேன்’ என்ற அண்ணாமலையின் கருத்துகளை திமுக ஏற்கிறதா என்பதை அவர்கள் விளக்க வேண்டும்” எனக் கேள்வி எழுப்பினார்.

திருமுருகன் காந்தி, “அண்ணாமலைக்கு சாதகமான நகர்வுகளைச் செய்யும் திமுகவின் முடிவுகளுக்கு மே 17 இயக்கம் வன்மையான கண்டனங்களை தெரிவிக்கிறது. பெரியாரியமும் திராவிடமும் ஆளும் வர்க்கத்தின் தொங்குசதை அல்ல, மக்கள் இயக்கம் என்பதை நன்கு அறிந்தவர்கள் நாம். இனிமேலும் பெரியாரிய-திராவிட அரசியலுக்கான போராட்டத்தை தீவிரமாக முன்னெடுப்போம்” என தனது அறிக்கையில் வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : தீயசக்தி தி.மு.க.வுடன் கைகோர்க்க முயற்சி.. நான் போகிறேன்.. எம்.ஆர் விஜய பாஸ்கர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com