அ.தி.மு.க.வில் இருந்து வைகை செல்வன் விலகல்.. எடப்பாடி பழனிசாமி மீது குற்றச்சாட்டு

Vaigai Selvan Quits AIADMK : அ.தி.மு.க.வில் இருந்து அக்கட்சியின் செய்தித் தொடர்பாளர் வைகை செல்வன் விலகியுள்ளார்.

Published on: July 3, 2026 at 8:57 pm

Updated on: July 3, 2026 at 8:58 pm

சென்னை, ஜூலை 3, 2026: அ.தி.மு.க.வில் இருந்து முன்னாள் அமைச்சர் வைகை செல்வன் விலகியுள்ளார். அவர் தனது ராஜினாமா கடிதத்தில் எடப்பாடி பழனிசாமி மீது கடுமையான குற்றச்சாட்டுகளை முன்வைத்து, “மரணத்தை விடக் கொடியது புறக்கணிப்பு” என உருக்கமாக குறிப்பிட்டுள்ளார். இந்த விலகல் தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், வைகை செல்வன் தனது கடிதத்தில், அ.தி.மு.க. தி.மு.க.வோடு இணைந்து ஆட்சியமைக்க முயன்றதால் கட்சியின் தனித்துவம் அழிந்துவிட்டது என்று குற்றம் சாட்டியுள்ளார். மேலும், சரியான நேரத்தில் தவறான முடிவுகளை எடுப்பதால் கட்சி வெற்றிப் பாதையிலிருந்து விலகிவிட்டதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார். தலைவர் தானே அழிந்தாலும் இயக்கம் வெற்றி பெற வேண்டும்; ஆனால் இயக்கமும் தொண்டர்களும் அழிந்தாலும் தான் மட்டும் நன்றாக இருக்க வேண்டும் என்று நினைப்பவர் நல்ல தலைவராக இருக்க முடியாது என அவர் எடப்பாடி பழனிசாமியை மறைமுகமாக விமர்சித்துள்ளார்.

அவர் மேலும், தேர்தல் களத்தில் தனித்து விடப்பட்ட நிலையிலும் கழகத்திற்காக பிரசாரம் செய்தேன், ஆனால் புறக்கணிப்பு மரணத்தை விடக் கொடியது என்பதை உணர்ந்தேன் என்று குறிப்பிட்டுள்ளார். வள்ளுவப் பேராசானின் வரிகளை மேற்கோள் காட்டி, “மதியாதவரின் பின் சென்று ஒருவன் உயிர் வாழ்வதைவிட, அவ்வாறு செய்யாததால் கெட்டான் என்று சொல்லப்படுதல் நன்று” எனத் தெரிவித்தார். தனது மாணவப் பருவம் தொட்டு ரத்தமும் சதையுமாய் இந்த இயக்கத்திற்காக பணியாற்றிய நிலையில், விலக வேண்டிய சூழ்நிலை மிகுந்த வேதனையை ஏற்படுத்துவதாகவும் அவர் கூறியுள்ளார்.

இந்த விலகல், ஏற்கனவே அ.தி.மு.க.வில் இருந்து பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகள் த.வெ.க.வில் இணைந்திருக்கும் சூழ்நிலையில் நடந்துள்ளது. இதனால், வைகை செல்வன் அடுத்து த.வெ.க.வில் இணைய வாய்ப்பு உள்ளதா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க : த.வெ.க குதிரைப் பேரம்.. வைகோ பேட்டியே சாட்சி.. டெல்லியில் இன்பதுரை பேட்டி

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com