Cotton Hits Record High : பருத்தி விலை இன்று (மே 20, 2026) புதிய உச்சம் தொட்டது. குவிண்டால் ரூ.10,761க்கு விற்பனையாகியுள்ளது.
Cotton Hits Record High : பருத்தி விலை இன்று (மே 20, 2026) புதிய உச்சம் தொட்டது. குவிண்டால் ரூ.10,761க்கு விற்பனையாகியுள்ளது.

Published on: May 20, 2026 at 5:13 pm
சென்னை, மே 20, 2026: விழுப்புரம் ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் நடைபெற்ற ஏலத்தில் பருத்தி விலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. ஒரு குவிண்டால் பருத்தி ரூ.10,761க்கு விற்பனையாகி, விவசாயிகள் உற்சாகத்திலும், ஜவுளி ஆலைகள் கவலையிலும் உள்ளன.
விலை அதிகரிப்பு
பருத்தியை பொறுத்தமட்டில் வழக்கமாக ரூ.9,000–10,000 வரை விற்பனையாகும். இந்நிலையில், பருத்தி, இம்முறை ரூ.10,761க்கு விற்பனையாகியுள்ளது. மேலும், கடந்த ஆண்டு அதிகபட்ச விலை ரூ.9,700 மட்டுமே இருந்த நிலையில், இம்முறை புதிய சாதனை பதிவு செய்யப்பட்டுள்ளது.
விவசாயிகள் மகிழ்ச்சி
இந்த விலை உயர்வு காரணமாக, விவசாயிகள் தங்கள் சாகுபடிச் செலவுகளை ஈடுகட்டவும், சிறந்த வருமானம் பெறவும் வாய்ப்பு கிடைத்துள்ளது எனத் தெரிவித்துள்ளனர். விவசாயிகளை பொறுத்தமட்டில், கடலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, பெரம்பலூர் உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தங்கள் விளைபொருட்களை சந்தைக்கு கொண்டு வந்துள்ளனர்.
இதற்கிடையில், பருத்தி விலை திடீரென உயர்ந்ததால், ஜவுளி ஆலைகள் மற்றும் நெய்தல் தொழில்கள் கவலை தெரிவித்துள்ளன. மேலும், அதிக விலை காரணமாக, உற்பத்தி செலவு உயர்ந்து, சந்தை நிலைமை பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
பருத்தியை பொறுத்தமட்டில், ஏப்ரல் 1ஆம் தேதி தொடங்கிய பருத்தி விற்பனை பருவம் ஜூன் வரை நீடிக்கும். இந்நிலையில், தேவை அதிகரித்து, வரத்து குறைந்தால், விலை மேலும் உயர வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க : 25 சதவீதம் வரை ரிட்டன்.. இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தெரியுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com