25 சதவீதம் வரை ரிட்டன்.. இந்த மியூச்சுவல் ஃபண்ட் முதலீடுகள் தெரியுமா?

25% Return Funds : கடந்த ஓராண்டில் 25 சதவீதம் வரை ரிட்டன் வழங்கிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் குறித்து பார்க்கலாம்.

Published on: May 18, 2026 at 12:16 pm

சென்னை, மே 18, 2026: கடந்த ஒரு வருடத்தில் பங்குச் சந்தை மியூச்சுவல் ஃபண்டுகள் பல சிரமங்களை சந்தித்தன. இருந்தாலும், மல்டி அசெட் அலோகேஷன் ஃபண்டுகள் சிறப்பாக செயல்பட்டு, சில திட்டங்கள் 25% வரை வருமானம் வழங்கியுள்ளன. தற்போது, முதலீட்டாளர்கள் இத்தகைய பல்வேறு சொத்து வகைகளில் முதலீடு செய்யும் ஃபண்டுகளுக்கு அதிக கவனம் செலுத்துகின்றனர்.

சந்தை நிலைமை

இந்திய சந்தையை பொறுத்தமட்டில், சென்செக்ஸ் -8.31%, நிப்டி -5.22% கடந்த 1 வருடத்தில் குறைந்துள்ளது. எனினும், நிப்டி மிட்காப் 150 5.83% மற்றும் நிப்டி ஸ்மால்காப் 250 1.45% வளர்ச்சி காட்டியுள்ளது.

இதனால், பல இக்விட்டி மியூச்சுவல் ஃபண்டுகள் குறைந்த அல்லது எதிர்மறை வருமானம் அளித்தன. இந்த நிலையில், மல்டி அசெட் அலோகேஷன் ஃபண்டுகள் சராசரியாக 12% வருமானம் அளித்துள்ளன. இதில், சில திட்டங்கள் 25–26% வருமானம் வரை வழங்கியுள்ளன. இவை ஈக்விட்டி + கடன் + மற்றும் தங்கம் மற்றும் வெள்ளி உள்ளிட்ட கமாடிட்டி உள்ளிட்டவற்றில் முதலீடு செய்வதால், சந்தை அதிர்வுகளை சமாளிக்க உதவுகின்றன.

இந்த நிலையில், பெரும்பாலான முதலீட்டாளர்கள் மல்டி அசெட் அலோகேஷன் ஃபண்டுகள் மீது கவனம் செலுத்தத் தொடங்கியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இந்திய ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி.. 3 முக்கிய காரணங்கள்!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com