TVK Allies in Cabinet : தமிழ்நாடு அமைச்சரவை நாளை (வியாழக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.
TVK Allies in Cabinet : தமிழ்நாடு அமைச்சரவை நாளை (வியாழக்கிழமை) விரிவாக்கம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.

Published on: May 20, 2026 at 1:53 pm
சென்னை, மே 20, 2026: தமிழகத்தில் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு நாளை அமைச்சரவை விரிவாக்கம் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இதில் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் மற்றும் கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சரவை இடங்கள் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
முதலமைச்சர் சி. ஜோசப் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசு, முதல் முறையாக அமைச்சரவை விரிவாக்கம் செய்ய உள்ளது. இந்நிலையில், காங்கிரஸ் கட்சியின் 2 எம்.எல்.ஏ.க்கள் அமைச்சரவையில் இடம் பெற வாய்ப்பு உள்ளது. இதற்கான இறுதி ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன; நாளை (மே 21) காலை லோக் பவன் வளாகத்தில் பதவியேற்பு நிகழ்ச்சி நடைபெற வாய்ப்பு உள்ளது.
கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு
இந்த நிலையில் தமிழக வெற்றிக் கழக அரசு, வி.சி.க தலைவர் தொல்.திருமாவளவன் மற்றும் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சியினருக்கும் அமைச்சரவை இடம் வழங்க அழைப்பு விடுத்துள்ளது.
ஏற்கனவே த.வெ.க அரசுக்கு இடதுசாரி கட்சிகளான இந்திய கம்யூனிஸ்ட் மற்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகள் வெளியில் இருந்து ஆதரவு அளித்து வருகின்றன.
இந்த நிலையில், கூட்டணி கட்சிகளை இணைத்துக் கொண்டு, அரசின் நிலைத்தன்மையை உறுதி செய்ய விஜய் முயற்சி மேற்கொள்கிறார். தற்போதைய அமைச்சரவையில் போக்குவரத்து, வருவாய், வேளாண்மை, சுற்றுச்சூழல், சுற்றுலா, தகவல் தொழில்நுட்பம், மதச்சார்பற்ற நலத்துறை போன்ற முக்கிய துறைகள் காலியாக உள்ளன.
இத்துறைகள் கூட்டணி கட்சிகளுக்கு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதையும் படிங்க : தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய பெயர்கள் பட்டியலில் யார் யார்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com