Tamil Nadu Cabinet Expansion : தமிழ்நாடு அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.
Tamil Nadu Cabinet Expansion : தமிழ்நாடு அமைச்சரவை விரைவில் விரிவாக்கம் செய்யப்படலாம் எனத் தகவல்கள் கூறுகின்றன.

Published on: May 19, 2026 at 9:12 pm
சென்னை, மே 19, 2026: தமிழ்நாட்டில் , முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழக அரசின் அமைச்சரவை இன்னும் ஓரிரு நாட்களில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. கொளத்தூர் சட்டமன்ற உறுப்பினர் வி.எஸ்.பாபு, திருப்பூர் சத்யபாமா, காங்கிரஸ் உறுப்பினர் ராஜேஷ் குமார் உள்ளிட்டோர் அமைச்சரவையில் இடம்பெற வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
சமீபத்தில் நடந்த சட்டமன்றத் தேர்தலில், தமிழக வெற்றிக் கழகம் 34.92% வாக்குகளுடன் 108 இடங்களில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்தது. திமுக 59 இடங்களில் வெற்றி பெற்று எதிர்க்கட்சியாகவும், அதிமுக 47 இடங்களில் வெற்றி பெற்று மூன்றாவது இடமாகவும் அமைந்தது.
எனினும், ஆட்சியமைக்க தேவையான பெரும்பான்மை இல்லாததால், காங்கிரஸ் மற்றும் பிற கூட்டணி கட்சிகள் தவெக அரசுக்கு ஆதரவு அளித்தன.
22 துறைகளுக்கு அமைச்சர் இல்லை
இந்த நிலையில், முதலமைச்சர் விஜய் ஏற்கனவே 9 அமைச்சர்களுடன் ஆட்சியைத் தொடங்கியுள்ளார். அவர்களுக்குள் உள்துறை, நிதி, சுகாதாரம், கல்வி, தொழில், மின்சாரம், உணவுப்பொருள் விநியோகம் உள்ளிட்ட 32 துறைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 22 துறைகளுக்கு இன்னும் அமைச்சர்கள் நியமிக்கப்படவில்லை.
காங்கிரஸூக்கு வாய்ப்பு
இதற்கிடையில், தமிழக வெற்றிக் கழகத்துக்கு ஆதரவு அளித்த காங்கிரஸ் கட்சியில் இருந்து இரண்டு அமைச்சர்கள் இடம்பெற உள்ளனர். மேலூர் சட்டமன்ற உறுப்பினர் விஸ்வநாதனுக்கு உயர்கல்வித் துறையும், கிள்ளியூர் சட்டமன்ற உறுப்பினர் ராஜேஷ் குமாருக்கு சுற்றுலாத் துறையும் ஒதுக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
உத்தேச பட்டியல்
அதேபோல், திருப்பூர் வடக்கு சத்யபாமா, ஆர்.கே. நகர் மரிய வில்சன், சேலம் தெற்கு பார்த்திபன், தஞ்சாவூர் விஜய் சரவணன், குமாரபாளையம் விஜயலட்சுமி, அறந்தாங்கி முகமது பர்வேஸ், மதுரை மத்திய முஸ்தபா, ராணிப்பேட்டை தாஹீரா, மதுரை வடக்கு கல்லாணை, கொளத்தூர் வி.எஸ்.பாபு ஆகியோர் அமைச்சரவை விரிவாக்கத்தில் இடம்பெற வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
கவர்னர் வருகை
தமிழக பொறுப்பு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் புதன்கிழமை (மே 20, 2026) சென்னை வருகிறார். அமைச்சரவை பட்டியல் வியாழக்கிழமை வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதன் மூலம், தவெக அரசு தனது முழுமையான அமைச்சரவை அமைப்பை நிறைவு செய்ய உள்ளது.
இதையும் படிங்க : பணத்தின் அடிப்படையில் பாரபட்சம்.. கோவில்களில் சிறப்பு தரிசனம் ரத்து செய்யப்படுமா?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com