விளையாட்டு வீரர்கள் தினமும் நேரில் சந்திக்கலாம்.. ஆதவ் அர்ஜூனா

Arjuna’s Open Meet : விளையாட்டு வீரர்கள் தினமும் என்னை நேரில் சந்திக்கலாம் என மாநில விளையாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார்.

Published on: May 20, 2026 at 2:04 pm

சென்னை, மே 20, 2026: சென்னை நேரு ஸ்டேடியத்தில் தினமும் விளையாட்டு வீரர்கள் என்னை நேரில் சந்திக்கலாம் என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா தெரிவித்துள்ளார். விளையாட்டு துறையை மேம்படுத்தும் நோக்கில் அவர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தி, வீரர்களின் கோரிக்கைகளை நேரடியாக கேட்கும் திட்டத்தை அறிவித்துள்ளார்.

தினசரி சந்திப்பு

அமைச்சர் ஆதவ் அர்ஜூனா விளையாட்டு வீரர்கள் தினமும் நேரு ஸ்டேடியத்தில் அவரை நேரில் சந்திக்கலாம் என அறிவித்துள்ளார். இந்நிலையில், வீரர்களின் பிரச்சினைகள், தேவைகள், கோரிக்கைகள் ஆகியவற்றை நேரடியாக கேட்டு தீர்வு காணும் முயற்சி மேற்கொள்ளப்பட உள்ளது என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

விளையாட்டு மேம்பாட்டு ஆலோசனை

சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்ற பொதுப்பணித்துறை ஆய்வு கூட்டத்தில் விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை நடைபெற்றது. அப்போது, புதிய விளையாட்டு கட்டமைப்புகள், கட்டட பராமரிப்பு, அரசு சார்ந்த உள்கட்டமைப்பு பணிகள் குறித்து விவாதம் நடந்தது.

இதில், விளையாட்டு துறையை மேம்படுத்த, வீரர்களின் கருத்துகள் மற்றும் தேவைகள் முக்கியம் என அமைச்சர் ஆதவ் அர்ஜூனா வலியுறுத்தினார்.

இதையும் படிங்க : தமிழக அமைச்சரவை விரிவாக்கம்: புதிய பெயர்கள் பட்டியலில் யார் யார்?

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com