மின்சார துறையில் ரூ.2.5 லட்சம் கோடி கடன்.. 200 யூனிட் இலவச மின்சாரம் எப்போது? சி.டி. நிர்மல் குமார் பதில்

Free Power from June : 2026 ஜூன் மாதத்தில் இருந்து 200 யூனிட் இலவச மின்சாரம் கிடைக்கும் என அமைச்சர் சி.டி. நிர்மல் குமார் கூறியுள்ளார்.

Published on: May 20, 2026 at 1:30 pm

சென்னை, மே 20, 2026: தமிழ்நாடு புதிய அமைச்சர்கள் நிர்மல் குமார் மற்றும் ஆதவ் அர்ஜூனா, தங்களது துறைகளின் முக்கிய ஆலோசனைகளை அதிகாரிகளுடன் நடத்தி, தேர்தல் வாக்குறுதிகள் விரைவில் செயல்படுத்தப்படும் என எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளனர்.

200 யூனிட் இலவச மின்சாரம்

இந்நிலையில், மின்சாரத்துறை அமைச்சர் நிர்மல் குமார் ஜூன் 10ஆம் தேதி முதல் 200 யூனிட் இலவச மின்சார திட்டம் நடைமுறைக்கு வரும் என அறிவித்துள்ளார். தொடர்ந்து, மின்சார வாரியத்தை லாபகரமாக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும், முந்தைய நிர்வாகத்தில் நடந்த முறைகேடுகளை சீரமைப்பதாகவும் தெரிவித்தார்.

ரூ.2.5 லட்சம் கோடி கடன்

மேலும், மாதாந்திர மின்சார கட்டண வசூல் நடைமுறைக்கு ஊழியர் பற்றாக்குறை காரணமாக தாமதம் ஏற்பட்டுள்ளதாகவும் கூறினார். இதற்கிடையில், மின்சார வாரியத்திற்கு தற்போது ரூ. 2.5 லட்சம் கோடி கடன் இருப்பதாக நிர்மல் குமார் தெரிவித்தார்.

கடன் அதிகமாக இருந்தாலும், 200 யூனிட் இலவச மின்சாரத்தை தொடர்ந்து வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.

பொதுப்பணித்துறை அமைச்சர் ஆய்வு

இந்த நிலையில், பொதுப்பணி மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா, சென்னை சேப்பாக்கத்தில் உள்ள தலைமை அலுவலகத்தில் அதிகாரிகளுடன் ஆய்வு கூட்டம் நடத்தினார். அப்போது, மாநிலம் முழுவதும் நடைபெறும் உள்கட்டமைப்பு திட்டங்கள், கட்டுமானப் பணிகள், நிலுவையில் உள்ள திட்டங்கள் குறித்து விரிவான ஆலோசனை மேற்கொண்டார். மேலும், கட்டட பராமரிப்பு, புதிய விளையாட்டு மேம்பாட்டுத் திட்டங்கள், அரசு சார்ந்த உள்கட்டமைப்பு பணிகள் குறித்து விவாதம் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : கோயம்பேட்டில் இருந்து பேருந்துகள் இயக்கம்.. ஆம்னி உரிமையாளர்கள் கோரிக்கை!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com