Annamalai Key Role : தமிழ்நாடு அரசியலில் மீண்டும் அண்ணாமலை தீவிரமாக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
Annamalai Key Role : தமிழ்நாடு அரசியலில் மீண்டும் அண்ணாமலை தீவிரமாக களமிறக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Published on: May 18, 2026 at 1:18 pm
சென்னை, மே 18, 2026: தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் பாஜக கடுமையான பின்னடைவை சந்தித்தது. இந்நிலையில், மாநிலத் தலைமை அமைப்பில் மாற்றம் செய்ய தேசியத் தலைமையகம் திட்டமிட்டுள்ளது எனக் கூறப்படுகிறது. அதன்படி, முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலைக்கு முக்கிய பொறுப்பு வழங்கப்பட வாய்ப்பு அதிகம் எனவும் கூறப்படுகிறது.
சட்டமன்ற தேர்தல் பின்னடைவு
2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஒரே ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மேலும், வாக்கு சதவீதம் 2.62% இலிருந்து 2.97% ஆக உயர்ந்தாலும், எதிர்பார்த்த முன்னேற்றம் இல்லை. இதனால், மாநில மற்றும் மாவட்ட அளவிலான நிர்வாகிகள் மாற்றப்படலாம் எனக் கூறப்படுகிறது.
அண்ணாமலையின் பங்கு
முன்னாள் மாநிலத் தலைவர் கே. அண்ணாமலை இளைஞர்கள் மற்றும் பெண்களிடையே பெரும் ஆதரவு பெற்றவர். இவர், தேர்தல் பிரசாரத்தின் இறுதிக்கட்டத்தில் கிட்டத்தட்ட 95 தொகுதிகளில் பிரசாரம் செய்தார். இதற்கிடையில், பல்வேறு பாஜக நிர்வாகிகள், அண்ணாமலையை மீண்டும் முக்கிய பதவிக்கு கொண்டு வர வேண்டும் என சமூக ஊடகங்களில் வலியுறுத்துகின்றனர்.
மறுசீரமைப்புத் திட்டம்
இந்த நிலையில், மே 19 மற்றும் 20ஆம் தேதிகளில் கோயம்புத்தூரில் நடைபெறும் பா.ஜ.க கூட்டத்தில் பல்வேறு மாற்றங்கள் வரலாம் எனக் கூறப்படுகிறது. இந்தக் கூட்டத்துக்கு பாஜக தேசிய பொதுச் செயலாளரான பி.எல் சந்தோஷ் தலைமை தாங்குகிறார். இதில், மாநில, மாவட்ட, ஊடகம், தகவல் தொழில்நுட்ப பிரிவு நிர்வாகிகளுடன் தனித்தனி அமர்வுகள் நடைபெறும் என்றும் கூறப்படுகிறது.
இதையும் படிங்க : 85 வயதில் சோக முடிவு.. அடையாறு ஆற்றில் குதித்த தயாரிப்பாளர் கே. ராஜன்!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com