இங்கிலாந்தில் முதலீடு செய்வதே இந்திய நிறுவனங்கள்தான்.. அண்ணாமலை

Annamalai on UK Investments: இங்கிலாந்தில் முதலீடு செய்வதே இந்திய நிறுவனங்கள்தான் என வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் அண்ணாமலை தெரிவித்துள்ளார்.

Published on: September 21, 2026 at 4:40 pm

மதுரை, செப்.21, 2026: முதலீடுகளை ஈர்க்க முதலமைச்சர் விஜய் லண்டன் சென்று வந்துள்ளதாக நிலையில், வீ த லீடர்ஸ் அமைப்பின் தலைவர் கு. அண்ணாமலை அதனை விமர்சித்து, வெளிநாட்டு பயணங்களை மேற்கொள்வதற்குப் பதிலாக தமிழகத்தில் உள்ள தொழில் நிறுவனங்களை முதலீடு செய்ய ஊக்குவிக்க வேண்டும் என தெரிவித்துள்ளார். குறிப்பாக கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களுக்கு தேவையான சலுகைகள் மற்றும் ஊக்கத்தொகைகளை வழங்கி, தமிழகத்திலேயே புதிய முதலீடுகளை உருவாக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தியுள்ளார்.

மேலும், இங்கிலாந்தின் பொருளாதார வளர்ச்சி 1 சதவீதமாக மட்டுமே இருப்பதாகக் குறிப்பிட்ட அவர், அந்நாட்டில் முதலீடு செய்வதில் இந்திய நிறுவனங்களே முக்கிய பங்கு வகிப்பதாக தெரிவித்துள்ளார். மஹிந்திரா உள்ளிட்ட இந்திய நிறுவனங்கள் இங்கிலாந்தில் முதலீடு செய்து வருவதை சுட்டிக்காட்டிய அவர், தமிழகத்தில் தொழில் நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்களுக்கு சாதகமான சூழலை உருவாக்குவதன் மூலம் மாநிலத்திலேயே அதிக முதலீடுகளை ஈர்க்க முடியும் என தெரிவித்துள்ளார்.

எனவே, முதலமைச்சர் வெளிநாடுகளுக்குச் சென்று முதலீடுகளை ஈர்ப்பதைவிட, தமிழகத்தின் முக்கிய தொழில் நகரங்களில் உள்ள நிறுவனங்களுடன் நேரடியாக கலந்துரையாடி, அவர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப சலுகைகளை வழங்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். கோயம்புத்தூர், மதுரை உள்ளிட்ட நகரங்களில் தொழில் விரிவாக்கத்திற்கான வாய்ப்புகளை உருவாக்குவதுடன், புதிய தொழில்கள் தொடங்குவதற்கும் முதலீடுகளை அதிகரிப்பதற்கும் அரசு ஊக்கமளிக்க வேண்டும் எனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதையும் படிங்க : சேலம் குப்பை எரிஉலை திட்டம்.. அன்புமணி ராமதாஸ் கடும் எதிர்ப்பு

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com