85 வயதில் சோக முடிவு.. அடையாறு ஆற்றில் குதித்த தயாரிப்பாளர் கே. ராஜன்!

K Rajan Passes away: தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் கே ராஜன் அடையாறு ஆற்றில் குறித்து தற்கொலை செய்து கொண்டார்; இது தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரிதாபத்தையும் ஏற்படுத்தவில்லை.

Published on: May 17, 2026 at 9:10 pm

சென்னை, மே 17 2026; பிரபல சினிமா தயாரிப்பாளரும் இயக்குனருமான கே ராஜன் அடையாறு ஆற்றில் குதித்து இன்று (ஞாயிற்றுக்கிழமை) தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி உள்ளது.

சினிமாவில் தயாரிப்பாளராக அறிமுகமான கே ராஜன் இயக்குனராகவும், நடிகராகவும் இருந்துள்ளார். இவர், சில ஆண்டுகளுக்கு முன்பு வெளியான துணிவு திரைப்படத்திலும் நடித்திருந்தார்.

இந்த நிலையில் தயாரிப்பாளர் கே ராஜனின் மரணம் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் பரிதாபத்தை ஏற்படுத்தி உள்ளது; சினிமாவில் உள்ள சில சர்ச்சையான விஷயங்கள் குறித்து வெளிப்படையாக பேசுவதில் கே ராஜன் வல்லவர்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு வரை இவர் youtube சேனல்களுக்கு பேட்டியளித்து வந்தார்; மேலும் சினிமாவில் சிறிய பட்ஜெட் படங்களுக்கு ஆதரவாகவும் குரல் கொடுத்து வந்தார்.

அடையாறு ஆற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட கே ராஜனின் உடல் பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது; இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தயாரிப்பாளர் கே ராஜனின் மரணத்திற்கு என்ன காரணம்? 85 வயதில் அவர் தற்கொலை செய்து கொள்ள காரணமாக அமைந்தது எது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க; தமிழ்நாட்டில் தமிழ் பேசுபவர் கட்சி ஆரம்பித்தால் திராவிட கட்சிதான்.. கமல்ஹாசன்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com