K. Annamalai: குடியுரிமை மற்றும் தேர்தல் தொடர்பான கேள்விகளை எழுப்பும் சிஜேபி (CJP) அமைப்பின் ஜனநாயக உரிமைக்கு முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.
K. Annamalai: குடியுரிமை மற்றும் தேர்தல் தொடர்பான கேள்விகளை எழுப்பும் சிஜேபி (CJP) அமைப்பின் ஜனநாயக உரிமைக்கு முன்னாள் தமிழக பாஜக தலைவர் கே. அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார்.

Published on: October 22, 2026 at 1:34 pm
கோவை, அக்.22, 2026: குடியுரிமை மற்றும் தேர்தல் தொடர்பான கேள்விகளை எழுப்பும் சிஜேபி (CJP) அமைப்பின் ஜனநாயக உரிமைக்கு முன்னாள் தமிழக பாஜக தலைவரும். வீ தி லீடர்ஸ் அமைப்பின் தலைவருமான கே. அண்ணாமலை ஆதரவு தெரிவித்துள்ளார். அந்த அமைப்பின் போராட்ட முறைகளில் தனக்கு முழு உடன்பாடு இல்லாவிட்டாலும், அவர்கள் எழுப்பும் கேள்விகள் நியாயமானவை என்றும் அவர் கூறியுள்ளார்.
சிஜேபி அமைப்பைச் சேர்ந்தவர்களைக் கைது செய்த டெல்லி காவல்துறையின் நடவடிக்கைக்கு அண்ணாமலை கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். கைது நடவடிக்கைகள் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியாது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், போராட்டக்காரர்களைக் கைது செய்வதற்குப் பதிலாக, அவர்கள் எழுப்பும் கேள்விகளுக்குப் பதிலளிப்பதே அரசின் கடமை என அண்ணாமலை வலியுறுத்தியுள்ளார். ஜனநாயகத்தில் கேள்வி எழுப்புவதற்கான உரிமை மதிக்கப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
சிஜேபி அமைப்பினர் தேர்தல் வாக்காளர் பட்டியல் திருத்தம் தொடர்பாக எழுப்பியுள்ள கேள்விகள் மற்றும் அவர்களுக்கு எதிரான காவல்துறையின் நடவடிக்கைகள் அரசியல் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளன. இந்தச் சூழலில், போராட்ட முறைகளில் கருத்து வேறுபாடு இருந்தாலும் கேள்வி எழுப்பும் உரிமையை ஆதரிப்பதாக அண்ணாமலை தெரிவித்திருப்பது கவனம் பெற்றுள்ளது.
இதையும் படிங்க : 1998 கோவை குண்டுவெடிப்பு வழக்கு கைதிகளுக்கு பரோல்.. விஜய் அரசுக்கு பாஜக கடும் எதிர்ப்பு!
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com