TASMAC shops in Chennai : சென்னையில் இரவு 10 மணிக்குள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சிட்டி கமிஷனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
TASMAC shops in Chennai : சென்னையில் இரவு 10 மணிக்குள் டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும் என சிட்டி கமிஷனர் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

Published on: May 17, 2026 at 8:16 pm
சென்னை, மே 17, 2026: சென்னை நகர காவல் ஆணையர், இரவு 10 மணிக்குள் அனைத்து மதுபானக் கடைகளும் மூடப்பட வேண்டும் என அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். டாஸ்மாக் மற்றும் எலைட் கடைகள் எதுவும் 10 மணிக்குப் பிறகு திறந்திருக்கக்கூடாது என அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து வெளியான அறிக்கையில், டாஸ்மாக் கடைகள்: இரவு 10 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்றும் எலைட் கடைகள் உள்ளிட்ட எதுவும் அதே நேரத்தில் மூடப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த உத்தரவை மீறினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் போலீசார் ரோந்துப் பணிகளை தீவிரப்படுத்துவார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
என்ன காரணம்?
இரவு நேரத்தில் மதுபானம் காரணமாக சண்டைகள், விபத்துகள் அதிகரித்துள்ளன எனக் கூறப்படுகிறது. இந்த நிலையில், மக்கள் பாதுகாப்பை உறுதி செய்வதே முக்கிய நோக்கம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையில், இரவு 10 மணிக்குப் பிறகு திறந்திருக்கும் கடைகளில் சோதனை நடத்தப்படும் என்றும் உரிமம் ரத்து, அபராதம், வழக்கு பதிவு செய்யப்படும் என்றும் காவல்துறை தரப்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உத்தரவு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
இதையும் படிங்க : ஸ்ரீபெரும்புதூரில் கானா பாடகர்கள் இரட்டை கொலை – பரபரப்பு.. குற்றவாளிகள் யார்?
திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள
திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.
© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com