உதயநிதிக்கு பாராட்டு, விஜய்க்கு ஆலோசனை.. நெல்லையில் கனிமொழி அதிரடி!

Kanimozhi : உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்ட நிலையில், தமிழக முதலமைச்சர் விஜய்க்கு ஆலோசனை வழங்கினார் கனிமொழி.

Published on: May 17, 2026 at 8:31 pm

திருநெல்வேலி, மே 17, 2026: தி.மு.க. அவசர செயற்குழு கூட்டம் திருநெல்வேலி மேலப்பாளையத்தில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடந்தது. இந்தக் கூட்டத்தில் திமுக துணை பொதுச்செயலாளரும், திமுக நாடாளுமன்ற குழுத் தலைவருமான கனிமொழி எம்.பி கலந்துகொண்டார்.

இக்கூட்டத்தில் பேசிய கனிமொழி, “மும்மொழிக் கொள்கையை திமுக தொடர்ந்து எதிர்த்து வருகிறது; புதிதாக பதவியேற்றுள்ள விஜய் தலைமையிலான அரசும் மும்மொழிக் கொள்கையை எதிர்க்க வேண்டும்” என்றார். மேலும், “தமிழக முதலமைச்சர் விஜய் எவ்விதமான மொழி திணிப்பையும் ஏற்றுக் கொள்ள கூடாது” எனவும் ஆலோசனை வழங்கினார்.

இந்தக் கூட்டத்தில் சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலினுக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது; மேலும், சட்டப்பேரவை தேர்தலில் தீவிர சுற்றுப்பயணம் மேற்கொண்ட மு.க ஸ்டாலினுக்கு நன்றி தெரிவிக்கப்பட்டது. இது மட்டுமின்றி தி.மு.க. கூட்டணிக்கு வாக்களித்த சுமார் 1 கோடியே 58 லட்சம் வாக்காளர்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.

இதற்கிடையில் கருணாநிதி பிறந்தநாளில் ஏழை- எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க : இரவு 10 மணிக்குள் டாஸ்மாக் கடைகள் மூடல்.. சென்னை கமிஷனர் உத்தரவு!

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com