‘பாஜகவுடன் நட்பு பாராட்டுகிறதா திமுக’.. திமுக முன்னாள் எம்பி கனிமொழி அதிரடி பதில்!

Kanimozhi Somu : பாரதிய ஜனதா கட்சியுடன் திமுக நட்பு பாராட்டுகிறதா என்ற கேள்விக்கு அதிரடியாக பதிலை அளித்துள்ளார் திராவிட முன்னேற்றக் கழகத்தின் முன்னாள் எம்பி கனிமொழி சோமு.

Published on: August 9, 2026 at 1:47 pm

Updated on: August 9, 2026 at 1:49 pm

சென்னை ஆகஸ்ட் 9, 2026; 2026 சட்டமன்ற தேர்தலுக்கு முன் திமுகவுடன் கூட்டணியில் இருந்த காங்கிரஸ், தேர்தல் முடிவு அறிவிப்புக்கு பின் தமிழக வெற்றி கழகத்துடன் இணைந்து ஆட்சி மற்றும் அதிகாரத்தில் பங்கெடுத்தது.
தற்போது தமிழ்நாட்டில் காங்கிரஸ் எம்எல்ஏக்கள் அமைச்சர்களாக உள்ளார்கள்; இந்த நிலையில் திமுக காங்கிரஸ் கூட்டணியில் பெரும் விரிசல் ஏற்பட்டது.

இதற்கிடையில் தொகுதி மறு வரையறை விஷயத்தில், திமுகவின் நிலைப்பாடு என்ன என்பது பெரும் கேள்விக்குறியாகி உள்ளது; இதற்கிடையில் தமிழ்நாடு வந்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தொகுதி மறு வரையறையை வரவேற்பவர்கள் எட்டப்பர்கள் என கடுமையாக வசித்தார்.

மறுபுறம் பாஜக, திமுக இடையே நட்பு ஏற்பட்டுள்ளதாக, செய்திகள் வெளியாகி வருகின்றன; இந்த நிலையில் திமுகவின் முன்னாள் எம்பி ஆன கனிமொழி சோமுவிடம் இது தொடர்பாக கேள்விகள் எழுப்பப்பட்டன.
இதற்கு பதில் அளித்த அவர், ” அரசியலில் யாரும் நிரந்தர எதிரியும் இல்லை; நிரந்தர நண்பனும் இல்லை. தமிழ்நாட்டிற்கு நல்லது எங்கிருந்து வந்தாலும் அதனை நாங்கள் ஆதரிப்போம்” என்றார்.

திமுக முன்னாள் எம்பி கனிமொழி சோமுவின் இந்த பேச்சு, தமிழக அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மத்திய அரசு கொண்டுவரும் தொகுதி மறு வரையறை மசோதா இம்மாதம் 15 முதல் 18ஆம் தேதிகளில் தாக்கல் ஆகும் எனவும் கூறப்படுகிறது.

இதையும் படிங்க; தொகுதி மறு வரையறை.. திமுக, அதிமுக நிலைப்பாடு என்ன? பஞ்சாபில் அரசியல் மாற்றம்!

“ஊழலின் ஊற்றுக்கண் திமுக!” – சட்டப்பேரவையில் ஆதாரங்களுடன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய முதல்வர் விஜய்! CM Vijay assembly speech

“ஊழலின் ஊற்றுக்கண் திமுக!” – சட்டப்பேரவையில் ஆதாரங்களுடன் அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சுமத்திய முதல்வர்

திராவிடன் டைம்ஸின் செய்திகளை உடனுக்குடன் தெரிந்துக்கொள்ள

வாட்ஸ்அப்

இன்ஸ்டாகிராம்

ட்விட்டர்

Share Article:

Trending News

  • All Post
  • Breaking News
  • Live
  • ஆன்மிகம்
  • இந்தியா
  • உலகம்
  • கல்வி/வேலை
  • சினிமா
  • தமிழ்நாடு
  • தொழில்நுட்பம்
  • லைஃப்ஸ்டைல்
  • வணிகம்
  • விளையாட்டு
  • வெப் ஸ்டோரீஸ்

Join the family!

Sign up for a Newsletter.

You have been successfully Subscribed! Ops! Something went wrong, please try again.
Edit Template

About

திராவிடன் டைம்ஸ்.காம் (www.dravidantimes.com) ஆன்லைன் செய்தித்தளம் ஆகஸ்ட் 18 2024ல் தொடங்கப்பட்டது. தமிழ்நாடு, இந்தியா, சர்வதேசம், வணிகம், லைஃப்ஸ்டைல், சினிமா, ஆன்மிகம், தொழில்நுட்பம், கல்வி மற்றும் வேலைவாய்ப்பு என பலதரப்பட்ட செய்திகளை பக்கச்சார்பின்றி வெளியிடுகிறது.

 

© 2024 dravidantimes.com – developed and designed by Thirdvizion.com